Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிக்ஸ் அடிச்சா தானே அவுட் ஆவோம்.. இப்ப என்ன பண்ணுவீங்க? ஷமி ஓவரில் நடந்த சம்பவம்!

அபுதாபி : முகமது ஷமி ஓவரில் ரன் அடிக்க முடியாத நிலை இருந்தது. எனினும், அவரது ஓவரில் ரன் குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஜோடி.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மும்பை அணி 191 ரன்கள் குவித்து பஞ்சாப் அணியை தோற்கடித்தது.

மும்பை - பஞ்சாப் போட்டி

மும்பை - பஞ்சாப் போட்டி

2020 ஐபிஎல் தொடரில் 13வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்தில் விக்கெட்களை இழந்த அந்த அணி நிதானமாக ரன் சேர்த்து வந்தது.

ரோஹித் அதிரடி

ரோஹித் அதிரடி

16வது ஓவர் முதல் அதிரடி ஆட்டம் ஆட திட்டமிட்டார் மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா. அவர் 16வது ஓவரில் வரிசையாக பவுண்டரி அடிக்க 22 ரன்கள் சேர்த்தது மும்பை. ஆனால், அடுத்த ஓவரில் அந்த திருப்பம் ஏற்படுத்தினார் ஷமி.

ஷமி ஓவர்

ஷமி ஓவர்

17வது ஓவரை வீசிய பஞ்சாப் பந்துவீச்சாளர் முகமது ஷமி முதல் பந்திலேயே ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, பொல்லார்டுடன் சேர்ந்தார். அவர்களால் அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

180 ரன்கள் வேண்டும்

180 ரன்கள் வேண்டும்

அடுத்து 18வது ஓவரில் நீஷம் பந்துவீச்சை சிதறடித்தது பொல்லார்டு - பாண்டியா ஜோடி. அந்த ஓவரில் 18 ரன்கள் கிடைத்தது. 180 ரன்களை எட்ட வேண்டும் என்ற நோக்கில் ஆடிய அவர்கள் அடுத்த ஓவரில் மீண்டும் ஷமி பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தனர்.

சிக்ஸ் அடித்தால் அவுட்

சிக்ஸ் அடித்தால் அவுட்

ஷமி ஓவரில் சிக்ஸ் அடித்தால் அவுட் ஆக வாய்ப்பு இருந்தது. அவர் துல்லியமாக பந்து வீசி வந்தார். இந்த நிலையில் பொல்லார்டு - பாண்டியா திட்டமிட்டு அந்த ஓவரில் ஃபோர் மட்டுமே அடித்தனர். பாண்டியா முதல் பந்தில் ஃபோர் அடித்தார்.

ஹாட்ரிக் ஃபோர்

ஹாட்ரிக் ஃபோர்

கடைசி மூன்று பந்துகளில் ஹாட்ரிக் ஃபோர் அடித்தார் பொல்லார்டு. அந்த ஓவரில் 19 ரன்கள் சேர்த்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஷமி ஓவரில் ரன் கிடைக்காது என கருதப்பட்ட நிலையில், சாமர்த்தியமாக ஆடி அவரது ஓவரிலும் ரன் குவித்தது மும்பை இந்தியன்ஸ்.

மும்பை வெற்றி

மும்பை வெற்றி

கடைசி ஓவரில் 4 சிக்ஸ் அடித்து 25 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் மும்பை 191 ரன்கள் சேர்த்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 143 ரன்கள் மட்டுமே எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Story first published: Friday, October 2, 2020, 12:16 [IST]
Other articles published on Oct 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+