Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏதோ தவறு நடக்கிறது.. சந்தேகமாக இருக்கிறது.. தினேஷ் கார்த்திக் எடுத்த முடிவு.. போட்டு உடைத்த லாரா!

துபாய்: கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகியது குறித்து மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரான் லாரா சந்தேகம் எழுப்பி உள்ளார்.

கொல்கத்தா அணி இந்த ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக இருக்கிறது. பிளே ஆப் செல்ல வாய்ப்பு இருக்கும் அணிகளில் ஒன்றாக கொல்கத்தா அணி பார்க்கப்படுகிறது.

இதுவரை 9 போட்டிகளில் ஆடி உள்ள கொல்கத்தா மொத்தம் 5 போட்டிகளில் வென்றுள்ளது. சென்னை, ஹைதராபாத் அணிகளை விட கொல்கத்தா மிகவும் சிறப்பாக இதுவரை ஆடி உள்ளது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் கொல்கத்தா அணி இந்த சீசனில் நன்றாக ஆடி வந்தாலும் கூட அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் ராஜினாமா செய்துள்ளார். தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்த சீசனில் கொல்கத்தா 7 போட்டிகளில் ஆடியது. இதில் 4 போட்டிகளில் அந்த அணியை தினேஷ் கார்த்திக் வெற்றிபெற வைத்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் திடீரென்று நேற்று மும்பை போட்டிக்கு முன்பாக தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தினேஷ் கார்த்திக்கு பதிலாக இயான் மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இயான் மோர்கன் தலைமையில் விளையாடிய கொல்கத்தா மும்பையிடம் தோல்வி அடைந்தது. ஹைதராபாத்திற்கு எதிராக சூப்பர் ஓவரில் திரில் வெற்றிபெற்றது.

ஏன்

ஏன்

இந்த நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகியது குறித்து மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரைன் லாரா கேள்வி எழுப்பி உள்ளார். அவர் தனது பேச்சில், கொல்கத்தா அணியில் கேப்டன்சி எப்போதும் பிரச்சனையாக இருந்தது கிடையாது. சுனில் நரேன் பவுலிங் மூலம் கொல்கத்தா அணியை இரண்டு போட்டிகளில் வெற்றிபெற வைத்தார் .

பவுலிங்

பவுலிங்

அவர் இருந்தால் அணியில் எல்லாம் சரியாக இருக்கும். இதனால் சுனில் நரேன் தனது பவுலிங்கை சரி செய்துவிட்டு மீண்டும் அணிக்குள் வர வேண்டும். இந்த சீசனில் ஆண்ட்ரு ரசல் சரியாக ஆடவில்லை. அவர் சரியாக பேட்டிங் செய்யவில்லை. அவர் தனது பார்மிற்கு திரும்ப வேண்டும்.

கேப்டன்

கேப்டன்

யார் வேண்டுமானாலும் அணியின் கேப்டனாக இருக்கலாம். தனிப்பட்ட வீரர்கள் சரியாக விளையாடுவதுதான் மிக முக்கியம். தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் பிரஷருக்கு கீழ் எப்படி ஆடுகிறார்கள் என்பதே முக்கியம். இப்போது கேப்டனை மாற்றியதால் கொல்கத்தா அணிக்குதான் பிரஷர் அதிகம் வந்துள்ளது. இதனால் அந்த அணி கூடுதல் அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளது.

அழுத்தம்

அழுத்தம்

தினேஷ் கார்த்திக் நன்றாகவே செயல்பட்டு வந்தார். கொல்கத்தா அணிக்குள் எதோ தவறு நடக்கிறது. எதுவும் சரியில்லை, அணியின் முடிவுகள் சந்தேகமாக இருக்கிறது, என்று தினேஷ் கார்த்திக் ராஜினாமா குறித்து லாரா பேட்டி அளித்துள்ளார். முன்னதாக கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகவில்லை அவரை பதவியில் இருந்து தூக்கிவிட்டனர் என்று கிரிக்கெட் விமர்சகர் மற்றும் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்து இருந்தார்.

பேட்டி

பேட்டி

அவர் தனது பேட்டியில், கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் ராஜினாமா எல்லாம் செய்யவில்லை. உண்மையில் அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டனர். தொடரின் பாதியில் அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டனர். இதுதான் உண்மை . வெளியே இதை அதிகாரபூர்வமாக சொல்லவில்லை. வெளியே தினேஷ் கார்த்திக் சுயமாக கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததாக கொல்கத்தா அணி தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார்.

Story first published: Monday, October 19, 2020, 20:25 [IST]
Other articles published on Oct 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+