கடுப்பில் தோனி எடுத்த ஆக்சன்.. அதிரடியாக நீக்கப்பட்ட லுங்கி நிகிடி.. களமிறங்கும் ஆஸ்திரேலிய புயல்!
துபாய்: டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இன்று சென்னை அணியில் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சென்னை அணியில் இருந்து லுங்கி நிகிடி நீக்கப்பட்டுள்ளார்.
சென்னை மற்றும் டெல்லிக்கு இடையில் இன்று துபாயில் ஐபிஎல் போட்டி நடக்கிறது. இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.
பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்றாலும் கூட தோனி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

நீக்கம்
சென்னை அணியில் இன்று முக்கியமான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிஎஸ்கேவில் இருந்து லுங்கி நிகிடி நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக தற்போது அணியில் ஜோஷ் ஹசல்வுட் இணைந்து உள்ளார்.

ஏன் நீக்கம்
லுங்கி நிகிடி கடந்த இரண்டு போட்டிகளாக சரியாக பந்து வீசவில்லை. முதல் போட்டியில் அதிக அளவில் தொடக்கத்தில் ரன் கொடுத்தார். கடைசியில் மட்டுமே விக்கெட் எடுத்தார். சென்ற போட்டியில் லுங்கி நிகிடி மிகவும் மோசமாக பந்து வீசினார்.

நோ பால்
கடந்த போட்டியில் சென்னையின் அணியின் தோல்விக்கு லுங்கி முக்கிய காரணமாக இருந்தார். கடைசி ஓவரில் லுங்கி அடுத்தடுத்து நான்கு சிக்ஸ் கொடுத்தார். கடைசி ஓவரில் மட்டும் இவர் 30 ரன்கள் கொடுத்தார். லுங்கி இவ்வளவு மோசமாக பந்து வீசவில்லை என்றால் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்து இருக்காது.

நீக்கம்
இவர் சில போட்டிகளில் நன்றாக விளையாடுகிறார் , சில போட்டிகளில் மோசமாக பந்து வீசுகிறார். இந்த நிலையில்தான் தற்போது இவரை தோனி நீக்கியுள்ளார். இதற்கு பதிலாக ஜோஷ் ஹசல்வுட் அணியில் சேர்க்கப்பட்டள்ளார். இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்.

யார் இவர் ?
மிகவும் உயரமான பவுலரான இவர் துல்லியம் மற்றும் வேகத்திற்கு பெயர் பெற்றவர். ஆஸ்திரேலிய வீரர் கிளைன் மெக்ராத் உடன் பலர் இவரை ஒப்பிட்டு இருக்கிறார்கள் . 145 கிமீ வேகத்தில் இவரால் யார்க்கர் வீச முடியும். இவருக்கு 29 வயதே ஆகிறது.


Click it and Unblock the Notifications