Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"யார்க்கர் புயல்".. இந்திய அணியில் தேர்வான நடராஜனுக்கு.. போன் செய்த ஸ்டாலின்.. என்ன பேசினார்?

துபாய்: இந்திய அணியில் தேர்வாகி இருக்கும் தமிழக வீரர் நடராஜனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அடுத்த மாதம் இந்திய அணி கிரிக்கெட் தொடரில் ஆட உள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையில் ஒருநாள், டெஸ்ட், டி 20 போட்டிகள் நடக்க உள்ளது.

இந்த அணியில் தமிழக வீரர் நடராஜன் தேர்வாகி உள்ளார். இந்தியாவின் டி 20 அணியில் பவுலராக நடராஜன் தேர்வாகி உள்ளார்.

தேர்வு

தேர்வு

ஐபிஎல் தொடரில் இவரின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நடராஜன் அணியில் தேர்வாகி உள்ளார். இவர் முதலில் நெட் பவுலராக மட்டுமே தேர்வாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இந்த நிலையில் நடராஜனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடராஜனுக்கு போன் செய்த ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட் செய்துள்ள ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள சேலத்து யார்க்கர் புயல் நடராஜனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

பேசினேன்

பேசினேன்

நான் நடராஜன் உடன் போனில் பேசினேன். அவர் உயர்வுகளைப் பெறவும், வெற்றிகள் குவித்து, அணிக்கு பெருமை சேர்க்கவும் எனது விருப்பங்களைத் தெரிவித்தேன்! அனைத்துக் கனவுகளும் நிறைவேறட்டும்!, என்று ஸ்டாலின் வாழ்த்தி டிவிட் செய்துள்ளார் .

செம

செம

இந்திய அணியில் தேர்வாகி இருக்கும் நடராஜன் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளார். முக்கியமாக இந்திய அணிக்கு இவர் டெத் ஓவர்களில் பவுலிங் செய்ய வாய்ப்புள்ளது. இவரின் யார்க்கர் ஆஸ்திரேலிய மைதானத்தில் எப்படி ஈடுபடும் என்பதை பார்க்க பலரும் ஆர்வமாக உள்ளனர்..இந்த நிலையில்தான் நடராஜனை யார்க்கர் புயல் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, November 10, 2020, 16:04 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+