Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 போட்டிதான் நடந்துள்ளது.. அதற்குள் அடுத்தடுத்து ஷாக்கிங் சம்பவங்கள்.. ஐபிஎல் தொடக்கமே இப்படியா?

துபாய்: ஐபிஎல் தொடர் தொடங்கி வெறும் 4 போட்டிகளே முடிந்து உள்ள நிலையில் அடுத்தடுத்து ஐபிஎல் தொடரில் ஷாக்கிங் சம்பவங்கள் நடந்து வருகிறது.

ஐபிஎல் தொடர் தற்போது அமீரகத்தில் தொடங்கி நடந்து வருகிறது. அமீரகத்தில் இருக்கும் துபாய், சார்ஜா, அபுதாபி மைதானங்களில் போட்டிகள் நடந்து வருகிறது.

கொரோனா பாதிப்பிற்கு இடையே ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடந்து வருகிறது. இதுவரை டெல்லி, சென்னை, மும்பை, ராஜஸ்தான், பெங்களூர், பஞ்சாப் ஆகிய அணிகள் மோதிய போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

ஐபிஎல் போட்டிகள் தொடங்கி 4 போட்டிகள் மட்டுமே முடிந்துள்ளது. ஆனால் அதற்குள் இந்த தொடரில் சில மோசமான சம்பவங்கள் நடந்துள்ளது. முதலில் டெல்லி அணியின் வீரர் இஷாந்த் சர்மா இந்த போட்டிக்கு பயிற்சி எடுக்கும் போதே காயம் அடைந்தார்.

காலில் காயம்

காலில் காயம்

ஆம் சரியாக பஞ்சாப் உடன் மோதுவதற்கு இரண்டு நாட்கள் முன் காயம் அடைந்தார். அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இன்னும் சில போட்டிகள் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது. இந்த காயம் காரணமாக அவர் இன்னும் பார்மிற்கு திரும்பவில்லை.

காலில் காயம்

காலில் காயம்

அதன்பின் போட்டியின் போது, டெல்லியின் இன்னொரு மூத்த வீரர் அஸ்வின் காயம் அடைந்தார். பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியின் போது, இவர் தனது முதல் ஓவரின் கடைசி பந்தில் கையில் அடி வாங்கினார். இதில் இவரின் தோள்பட்டை எலும்பில் காயம் ஏற்பட்டது. இவரின் தோள்பட்டை எலும்பு விலகிவிட்டது.

எலும்பு

எலும்பு

இதனால் இன்னும் ஒரு போட்டியில் அஸ்வின் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் இன்னொரு பக்கம் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மிட்சல் மார்ஷ் காயம் அடைந்தார். ஆர்பிசி அணி பேட்டிங் செய்த போது ஹைதராபாத் வீரர் மிட்சல் மார்ஸ் காயம் அடைந்தார். அவர் ஐந்தாவது ஓவர் வீசிக்கொண்டு இருந்தார். அப்போது நான்காவது பந்து வீசியவர் கீழே விழுந்து காயம் அடைந்தார்.

மிக மோசம்

மிக மோசம்

இவரின் காயம் மிக மோசமாக இருந்தது. இந்த நிலையில் காயம் காரணமாக தற்போது ஐபிஎல் தொடரில் இருந்தே இவர் விலகி உள்ளார். இது ஹைதராபாத் அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இன்னொரு பக்கம் நேற்று போட்டியில் சென்னை அணிக்காக அம்பதி ராயுடு விளையாடவில்லை.

வெளியேறினார்

வெளியேறினார்

இவருக்கும் கையில் சின்ன காயம் மற்றும் முதுகு தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த போட்டியிலும் இவர் விளையாட வாய்ப்பு இல்லை என்கிறார்கள். ஐபிஎல் தொடங்கி 4 போட்டிகளிலேயே முக்கிய வீரர்கள் காயம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Story first published: Wednesday, September 23, 2020, 20:23 [IST]
Other articles published on Sep 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+