Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த வீடியோவை பாருங்க புரியும்.. சிஎஸ்கேவின் தோல்விக்கு காரணம் இவர்கள்தான்.. கடும் கோபத்தில் தோனி!

துபாய்: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவின் தொடர் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஐபிஎல் சீசனில் மிக மோசமான அணியாக சிஎஸ்கே உருவெடுத்துள்ளது. அடுத்தடுத்த தோல்விகள் மூலம் சிஎஸ்கே தனது பரம்பரை ரசிகர்களை கடுமையாக ஏமாற்றி உள்ளது. தொடர் தோல்விகளால் சிஎஸ்கே மீதும் கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

இந்த விமர்சனங்கள் காரணமாக சிஎஸ்கே கேப்டன் தோனி அணியில் இருக்கும் சில முக்கியமான வீரர்கள் மீது கோபத்தில் இருக்கிறார். பல வாய்ப்புகள் கொடுத்தும் கூட சரியாக ஆடாத காரணத்தால் சில மூத்த வீரர்கள் மீது தோனி அதிருப்தியில் இருக்கிறார்.

காரணம்

காரணம்

சிஎஸ்கேவின் இந்த தொடர் தோல்விக்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் முக்கிய காரணம், சென்னையின் மோசமான ஸ்பின் பவுலிங். சென்னையின் ஸ்பின் பவுலிங் இந்த சீசனில் மிக மோசமாக உள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா இந்த முறை சரியாக பவுலிங் செய்யவில்லை. அதேபோல் இன்னொரு பக்கம் பியூஷ் சாவ்லா விக்கெட் எடுத்தாலும் அதிக ரன்களை வாரி வழங்குகிறார்.

ஹர்பஜன்

ஹர்பஜன்

இந்த தொடரில் ஹர்பஜன் விளையாடுவார் என்று நம்பி சிஎஸ்கே சென்றது. ஆனால் அவர் பெரிய அளவில் ஏமாற்றம் அளித்து தொடரை விட்டு வெளியேறினார். இதனால் தற்போது ஜடேஜா, பியூஷ் சாவ்லாவை வைத்து சிஎஸ்கே சமாளித்துக் கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் சிஎஸ்கேவின் பேட்டிங் மிக மோசமாக உள்ளது. ஓப்பனிங் வீரர்கள் பெரிய அளவில் ஏமாற்றம் அளித்துள்ளனர்.

முரளி விஜய்

முரளி விஜய்

முரளி விஜய் இந்த தொடரில் மிக மோசமாக ஆடி வருகிறார்.டெஸ்ட் வீரர் என்பதால் அதே நினைப்போடு ஐபிஎல் போட்டிகளிலும் ஆடி வருகிறார். இது சென்னை அணியை பெரிய அளவில் பாதிக்கிறது. அதேபோல் மிடில் ஆர்டரில் இறங்கும் கேதார் ஜாதவ் சரியாக பேட்டிங் செய்வது இல்லை. இந்திய அணி உலகக் கோப்பையின் போது மிடில் ஆர்டர் சரி இல்லாமல் கஷ்டப்பட்டது.

சிஎஸ்கே நிலை

சிஎஸ்கே நிலை

அதேபோல் இந்த முறை சிஎஸ்கே ஐபிஎல் தொடரில் சரியான மிடில் ஆர்டர் வீரர் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் மோசமான பேட்டிங்கை கிண்டல் செய்யும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. சென்னை அணியின் தோல்விக்கு யாரெல்லாம் காரணம் என்று விவரித்து இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பிரண்ட்ஸ்

பிரண்ட்ஸ்

நடிகர் விஜய், சூர்யா நடித்த பிரண்ட்ஸ் படத்தில் வரும் காட்சியாகும் இது. இதில் கான்ட்ராக்டர் நேச மணியன் அப்ரண்டிஸ் எல்லோரும் சேர்ந்து கடிகாரத்தை உடைத்த பின் நேசமணி எல்லோரையும் கோபமாக திட்டுவார். இதை அப்படியே சிஎஸ்கேவாக மாற்றி கிண்டல் செய்துள்ளனர். சிஎஸ்கே கோச் பிளமிங்தான் கான்ட்ராக்டர் நேசமணி.. இவர் சிஎஸ்கே வீரர்களை திட்டுவது போல இந்த வீடியோ உள்ளது.

வீடியோ

முக்கியமாக கடைசியில் வரும் முரளி விஜயை பார்த்து ''என்ன பிளிங்கா? எனக்குதான்டா பிளிங்க்"' என்று பிளமிங் திட்டுவது போல இந்த வீடியோ அமைந்து உள்ளது. பேஸ்புக்கில் வெளியாகி இந்த வீடியோ வைரலாகி வருகிறது. முரளி விஜயை உடனே பிளெயிங் லெவன் அணியில் இருந்து நீக்கினால்தான் சிஎஸ்கே அணி வெற்றிபெறும் என்று பலரும் விமர்சனம் வைத்து வருகிறார்கள்.

Story first published: Wednesday, September 30, 2020, 22:10 [IST]
Other articles published on Sep 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+