For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதற்குள் தொடங்கிய மோதல்.. சிஎஸ்கே - மும்பை போட்டிக்கு முன்னாடியே இப்படி ஒரு சண்டையா.. என்ன நடந்தது!?

சென்னை: ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பே மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கும் , சிஎஸ்கே ரசிகர்களுக்கும் இடையே மோதல் தொடங்கி விட்டது. செப்டம்பர் 19ம் தேதி இரண்டு அணிகளுக்கும் இடையே முதல் போட்டி நடக்க உள்ள நிலையில் டிவிட்டரில் #தமிழ்நாடுMIசாம்ராஜ்யம் என்ற டேக் வைரலாகி வருகிறது.

உலகின் நம்பர் 1 கிரிக்கெட் லீக் தொடராக ஐபிஎல் தொடர் நிலவி வருகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று, தங்கள் அணியில் இருந்தே மொத்தமாக வெளியேறும் நிகழ்வுகள் கூட நடக்கிறது.

உலகம் முழுக்க பிரபலமாக இருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் பெஸ்ட் அணி எது என்று கேள்வி பல காலமாக இருக்கிறது. ஹைதராபாத், மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா என்று பல அணிகளுக்கு இடையே, இந்த பெஸ்ட் அணிக்கான போட்டி நிலவி வருகிறது.

வைரிகள்

வைரிகள்

அதில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் டாப் அணிகள் மும்பை மற்றும் சென்னை. ஐபிஎல் தொடரின் பரம வைரிகள் என்று இந்த இரண்டு அணிகளை குறிப்பிடலாம். சென்னைக்கும், மும்பைக்கும் ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்தே கடுமையான மோதல் நிலவி வருகிறது. ''யார் பெருசுன்னு அடிச்சுக்கட்டு'' என்பது போல இரண்டு அணிகளுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.

எப்படி

எப்படி

அதிலும் ''நாங்க 4 கப் அடிச்சு இருக்கோம்'' என்று ஒரு பக்கம் மும்பை அணி சொல்ல... ''நாங்க மூணு கப் அடிச்சு இருக்கோம், எல்லா பிளே ஆப்பிற்கும் போய் இருக்கோம்'' என்று சென்னை அணி சொல்ல.. இணையம் முழுக்க இரண்டு அணிக்கும் எப்போதும்தான் கடும் மோதல்தான். இதெல்லாம் போக யார் பெஸ்ட் கேப்டன் என்ற போட்டியும் தோனி - ரோஹித் இடையே நிலவி வருகிறது.

யார் கேப்டன்

யார் கேப்டன்

தோனிதான் பெஸ்ட் கேப்டன் என்று ரோஹித்தே ஒப்புக்கொண்டாலும் கூட அதை மும்பை ''பால்டான்ஸ்'' ஒப்புக்கொண்டது இல்லை. ''ரோஹித்தான் பெஸ்ட்.. தோனி போய் எடுங்க ரெஸ்ட்டு'' என்று கலாய்த்து தள்ளுவதே மும்பை இந்தியன்ஸ் வேலை.. இன்னொரு பக்கமும் அம்பானி தொடங்கி சச்சின் வரை பெரிய லாபி சப்போர்ட்தான் மும்பை ஜெயிக்க காரணம்... ''கேப்டன் என்னமோ ரோஹித்தான் ஆனால் கப்பு முகேஷ் பாயோடுது'' என்று மும்பையை சிஎஸ்கேயன்ஸ் கலாய்ப்பதும் வழக்கம்.

வைரல்

வைரல்

மோதல் இப்படி இருக்க ''வளர்த்த டியோ பைக் மாரில் பாய்ந்தது போல'' தமிழகத்தில் இருக்கும் தமிழர்களே மும்பை அணிக்கு ஆதரவாக் டிவிட் செய்துள்ளனர். ஆம் கண்ணை கசக்கிட்டு படிச்சாலும் நீங்கள் படிச்சதும் உண்மைதான். தமிழகத்தை சேர்ந்த நெட்டிசன்களே எம்ஐக்கு ஆதரவாக ''#தமிழ்நாடுMIசாம்ராஜ்யம்'' என்ற டேக்கை நேற்று மாலையில் இருந்து உருட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

டேக் வைரல்

டேக் வைரல்

தமிழகத்தின் முழு சப்போர்ட் மும்பைக்கே.. வேலு நாயக்கர் முதல் காலா சேட்டு வரை தமிழர்களை வளர்த்துவிட்டு பூமி. அதனால் எங்கள் சப்போர்ட் ரோஹித் அண்ட் பங்காளிகளுக்கே என்று இணையத்தில் தீவிரமாக #தமிழ்நாடுMIசாம்ராஜ்யம் டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள். சாதாரணமாக தொடங்கிய டிரெண்ட் தற்போது தேசிய அளவில், பெரியார், மோடி பிறந்த நாள் டேக்கை முந்தி முதல் இடம் பிடித்துள்ளது.

எத்தனை டிவிட்

எத்தனை டிவிட்

70.1 ஆயிரம் டிவிட்களுடன் தேசிய அளவில் முதல் இடத்தில் இந்த டேக் வைரலாகி வருகிறது.முழுக்க முழுக்க மும்பை அணிக்கு சப்போர்ட் செய்யும் தமிழர்கள், மும்பையில் இருந்து கொண்டு தமிழர்கள் போல வேடமணிந்து டிவிட் செய்யும் ''நீல ஆடுகள்'' பலர் இதில் டிவிட் செய்து வருகிறார்கள். ரோஹித்தின் சாதனைகள், மும்பை அணி எவ்வளவு வலுவான டீம் என்று வகை வகையாக டேட்டாவை வெளியிட்டு வருகிறார்கள்.

டேட்டா எப்படி

டேட்டா எப்படி

சிஎஸ்கேவை விட மும்பை அணிதான் பெஸ்ட் என்று இதில் தமிழர்களே பல புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறார்கள் . இந்த #தமிழ்நாடுMIசாம்ராஜ்யம் டிரெண்டில் விஜய் ரசிகர்கள் அதிகம் பங்கேற்று இருப்பதும் ஆச்சர்யம் அளிக்க கூடிய விஷயம். விஜய் பேன்ஸ் கிளப் பல இந்த டிரெண்டை முன்னின்றி நடத்தி வருகிறது. இந்திய அணிக்கு ரோஹித்தை கேப்டனாக போட வேண்டும் என்று பலரும் இதில் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Story first published: Friday, September 18, 2020, 13:51 [IST]
Other articles published on Sep 18, 2020
English summary
IPL 2020: MI team Tamilnadu fans show their support to Rohit in social media.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+