Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்டி போட்டு சிக்ஸ் அடித்த பாண்டியா - இஷான்.. அந்த 2 வீரர்களை குறி வைத்த மும்பை.. கதிகலங்கிய டெல்லி

துபாய் : டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி திட்டமிட்டு ஆடி 200 ரன்கள் குவித்தது.

டெல்லி அணியின் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களை குறி வைத்து காலி செய்தது மும்பை அணி.

பாண்டியா கடைசி நேரத்தில் சிக்ஸ் மட்டுமே அடித்து மிரட்டல் ஆட்டம் ஆடினார். இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து மும்பை அணியை மீட்டனர்.

டாஸ் வென்ற டெல்லி

டாஸ் வென்ற டெல்லி

இந்தப் போட்டியில் வெல்லும் அணி நேரடியாக 2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற நிலையில் இரு அணிகளும் பலமான அணியுடன் களமிறங்கின. டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

ரோஹித், பொல்லார்டு ஏமாற்றம்

ரோஹித், பொல்லார்டு ஏமாற்றம்

மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய பேட்ஸ்மேன்கள் ரோஹித், பொல்லார்டு பெரிய இன்னிங்க்ஸ் ஆடுவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால், ரோஹித் சர்மா, கீரான் பொல்லார்டு இருவரும் டக் அவுட் ஆகி பெரும் ஏமாற்றம் அளித்தனர்.

டி காக், சூர்யகுமார்

டி காக், சூர்யகுமார்

துவக்க வீரர் டி காக் பொறுப்பாக ஆடினார். விரைவாக ரன் சேர்த்த அவர் 25 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். 5 ஃபோர், 1 சிக்ஸ் அடித்தார். சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். 6 ஃபோர், 2 சிக்ஸ் அடித்தார் அவர்.

இஷான் கிஷன், பாண்டியா

இஷான் கிஷன், பாண்டியா

அடுத்து வந்த இஷான் கிஷன் பொறுப்பாக ஆடி வந்தார். பொல்லார்டு டக் அவுட் ஆன நிலையில் அவர் நிலையாக ஆடி ரன் சேர்த்தார். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து, இஷான் கிஷன் சிக்ஸ் அடித்து தெறிக்கவிட்டார்.

சிக்ஸ் மழை

சிக்ஸ் மழை

ஹர்திக் பாண்டியா அடித்தால் சிக்ஸ் மட்டுமே என 14 பந்துகளில் 5 சிக்ஸ் அடித்து, 37 ரன்கள் சேர்த்தார். இஷான் கிஷன் 30 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். அவர் 4 ஃபோர், 3 சிக்ஸ் அடித்தார்.

மும்பை ஸ்கோர்

மும்பை ஸ்கோர்

மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. முக்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போதும் இளம் வீரர்கள் அணியை 200 ரன்கள் எட்டச் செய்தனர். டெல்லி அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களை குறி வைத்து பதம் பார்த்தது மும்பை.

டெல்லி பரிதாபம்

டெல்லி பரிதாபம்

டெல்லி அணியில் அஸ்வின் 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் சாய்த்தார். நோர்ஜே, ஸ்டோய்னிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ரபாடா 42 ரன்கள், நோர்ஜே 50 ரன்கள், டேனியல் சாம்ஸ் 44 ரன்கள் என டெல்லி அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி இறைத்தனர்.

Story first published: Thursday, November 5, 2020, 22:03 [IST]
Other articles published on Nov 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+