Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நண்பன் ரோஹித் டீம் ஜெயிக்க உதவிய தவான்.. டி காக், சூர்யகுமார் அரைசதம்... மும்பை அபார வெற்றி!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 180 ரன்கள் எடுக்க முயற்சித்து, 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தவானின் நிதான ஆட்டம், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ரன் அவுட் அந்த அணிக்கு எதிராக அமைந்தது.

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையே நடந்த 27வது லீக் போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்கு மோசமான துவக்கம் அளித்தார் ப்ரித்வி ஷா. அவர் 5 ரன்களில் வெளியேறினார்.

டெல்லி ஸ்கோர்

டெல்லி ஸ்கோர்

ரஹானே 15, ஸ்ரேயாஸ் ஐயர் 42, ஸ்டோய்னிஸ் 13, தவான் 69 ரன்கள் சேர்த்தனர். 20 ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் 180 ரன்களை எளிதாக எட்டும் என்பது போல ஆடி வந்தது.

சறுக்கல்

சறுக்கல்

அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கடைசி 3 ஓவர்கள் இருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். அது ரன் குவிக்கும் வேகத்தை குறைத்தது. அடுத்து தவான் 52 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து நிதான ஆட்டம் ஆடியது மும்பை அணிக்கு தான் உதவியாக இருந்தது.

மும்பை பேட்டிங்

மும்பை பேட்டிங்

163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தார் ரோஹித் சர்மா. அவர் 12 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டி காக் - சூர்யகுமார் யாதவ் இணைந்து ஆடினர்.

இரண்டு அரைசதம்

இரண்டு அரைசதம்

இருவரும் அரைசதம் கடந்தனர். டி காக் 4 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து 53 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 6 ஃபோர், 1 சிக்ஸ் அடித்து இருந்தார். அவர்கள் சென்ற பின் இஷான் கிஷன் அதிரடி ஆட்டம் ஆடினார்.

கடைசி ஓவர் வரை..

கடைசி ஓவர் வரை..

ஹர்திக் பாண்டியா டக் அவுட் ஆனார். கடைசி நேரத்தில் பொல்லார்டு நிதான ஆட்டம் ஆடினார். அதனால், போட்டி கடைசி ஓவர் வரை நீண்டது. க்ருனால் பாண்டியா - பொல்லார்டு அவசரப்படாமல் கடைசி ஓவர் வரை நீடித்து ஆடினர்.

மும்பை வெற்றி

மும்பை வெற்றி

மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்து 19.4 ஓவர்களில் வெற்றி பெற்று இலக்கை எட்டியது. 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது.

Story first published: Monday, October 12, 2020, 10:35 [IST]
Other articles published on Oct 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+