Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MI vs DC : அதெல்லாம் மாத்த முடியாது.. அடம் பிடித்த ரோஹித் சர்மா.. டெல்லி போட்டியில் நடந்த சம்பவம்!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் நிகழ்வின் போது மும்பை அணியில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்து ஆச்சரியம் அளித்தார்.

27வது லீக் போட்டி

27வது லீக் போட்டி

2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் 27வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

அணி மாற்றங்கள்

அணி மாற்றங்கள்

அப்போது இரு அணி கேப்டன்களும் மாற்றங்கள் குறித்து அறிவித்தனர். டெல்லி அணியில் ரிஷப் பண்ட் காயம் காரணமாக நீக்கப்பட்டார். அவருக்கு பதில் அஜின்க்யா ரஹானே அணியில் சேர்க்கப்பட்டார். ஷிம்ரான் ஹெட்மயர் நீக்கப்பட்டு அவருக்கு பதில் அலெக்ஸ் கேரி அணியில் சேர்க்கப்பட்டார்.

ஒரே அணி

ஒரே அணி

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா தனகல் அணியில் எந்த மாற்றும் செய்யவில்லை என்றார். ஆறு போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்றுள்ள நிலையில் மும்பை அணி கடந்த ஐந்து போட்டிகளில் அணியில் எந்த மாற்றமும் செய்யாமல் ஒரே அணியுடன் களமிறங்கி வருகிறது.

பிடிவாதம்

பிடிவாதம்

மற்ற அணிகள் வெற்றி, தோல்வியை தாண்டி ஒரீரு வீரர்களை போட்டி நடக்கும் மைதானம், எதிரணி ஆகியவற்றுக்கு ஏற்ப மாற்றி வரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி எந்த போட்டியாக இருந்தாலும் ஒரே அணியுடன் தான் களமிறங்குவோம் என்பதில் பிடிவாதமாக உள்ளது.

அணியை மாற்ற காரணம் இல்லை

அணியை மாற்ற காரணம் இல்லை

இது பற்றி ரோஹித் சர்மா பேசுகையில், டாஸ் ஒரு விஷயமே அல்ல. நல்ல கிரிக்கெட் யார் ஆடுகிறார்கள்? என்பது தான் முக்கியம். டாஸ் தொற்று முதலில் பந்து வீசுவது எங்களுக்கு சவால். இந்தப் போட்டியிலும் நாங்கள் அதே அணியுடன் களமிறங்குகிறோம். அணியை மாற்ற எனக்கு எந்த காரணமும் கிடைக்கவில்லை என்றார்.

முதன் முறையாக வாய்ப்பு

முதன் முறையாக வாய்ப்பு

டெல்லி அணியில் முதன் முறையாக அஜின்க்யா ரஹானேவுக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்து பதவி நீக்கப்பட்டு இருந்தார். இந்த சீசனில் அவர் டெல்லி அணிக்கு தாவினார்.

சிஎஸ்கே அணிக்கு தாவுவார்?

சிஎஸ்கே அணிக்கு தாவுவார்?

அவருக்கு முதல் ஆறு போட்டிகளில் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், அவர் ஐபிஎல் ட்ரான்ஸ்பர் மூலம் சிஎஸ்கே அணிக்கு தாவுவார் எனவும் சிலர் கூறி வந்தனர். இந்த நிலையில் அவரை காயம் அடைந்த பண்ட்டுக்கு பதில் ஆட வைத்துள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.

Story first published: Wednesday, October 14, 2020, 21:08 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+