Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தம்பி தப்பு பண்ணிட்டார்.. டாஸ் வென்ற டெல்லி கேப்டன்.. இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாது!

துபாய் : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தகுதிச் சுற்றுப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்றது.

டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அது சரியான முடிவாக பலர் பார்த்தாலும், சிலர் இது தவறான முடிவு என கூறி வருகின்றனர்.

சேஸிங் செய்வது கடினம்

சேஸிங் செய்வது கடினம்

முக்கியமான போட்டியில் அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சேஸிங் செய்வது கடினம் என்பதால் அவர் முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் அடிக்க முயற்சி செய்திருக்க வேண்டும் என கூறி வருகின்றனர். அதே சமயம், துபாய் ஆடுகளம் குறித்தும் பேசப்படுகிறது.

துபாய் ஆடுகளம்

துபாய் ஆடுகளம்

துபாய் ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றன. ஒரு சில போட்டிகள் தவிர சேஸிங் செய்யும் அணிக்கே துபாய் ஆடுகளம் சாதகமாக உள்ளது. இந்த நிலையில் தான் டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இரண்டு வீரர்கள்

இரண்டு வீரர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா, ட்ரென்ட் போல்ட் என இரண்டு முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களும் கடந்த போட்டியில் அளிக்கப்பட்ட ஓய்வில் இருந்து தற்போது அணிக்கு திரும்பி உள்ளனர். அவர்கள் வருகையால் மும்பை அணி பந்துவீச்சில் பலமாக உள்ளது.

தவறு

தவறு

இந்த நிலையில் டெல்லி அணி சேஸிங் தேர்வு செய்து இருப்பது தவறு என சில ரசிகர்கள் கூறி வருகின்றனர். எனினும், இந்த ஐபிஎல் தொடரில் ஆடுகளம் தான் போட்டிகளை பெரும்பாலும் முடிவு செய்து வருகின்றது. மும்பை அணி சூழ்நிலையை தாண்டி வெற்றி பெறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Story first published: Thursday, November 5, 2020, 20:06 [IST]
Other articles published on Nov 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+