Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படியா ஆடுவாங்க? அரைசதம் போட்டு ஆப்பு வைத்த தவான்.. வெறுத்துப் போன டெல்லி ரசிகர்கள்!

அபுதாபி : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 162 ரன்கள் குவித்தது.

இது நல்ல ஸ்கோர் என்றாலும், அந்த அணியால் 180 ரன்கள் கூட எடுத்திருக்க முடியும். அதற்கான வாய்ப்பு இருந்தது.

ஆனால், துவக்க வீரர் ஷிகர் தவான் இரண்டு வகைகளில் அதை தடுத்து நிறுத்தினார். முதலில் நிதான ஆட்டம் ஆடியவர், தவறான அழைப்பால் மார்கஸ் ஸ்டோய்னிஸ் விக்கெட் ரன் அவுட் ஆகவும் காரணமாக இருந்தார். அதனால், டெல்லி அணி ரசிகர்கள் வெறுத்துப் போனார்கள்.

டெல்லி - மும்பை போட்டி

டெல்லி - மும்பை போட்டி

மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே ஆன போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மும்பை அணியும் வலுவாக இருந்ததால் இந்தப் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

டெல்லி பேட்டிங்

டெல்லி பேட்டிங்

டெல்லி அணி துவக்கத்தில் ப்ரித்வி ஷாவை 4 ரன்கள் எடுத்த நிலையில் இழந்தது. அடுத்து மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்த ரஹானேவை 15 ரன்கள் எடுத்த நிலையில் இழந்தது. தவான் - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து ஆடினர்.

ஸ்ரேயாஸ் ஐயர்

ஸ்ரேயாஸ் ஐயர்

இருவரும் விக்கெட் இழக்காமல், சற்று நிதானமாக ஆடினர். ஓவருக்கு 7 ரன்கள் என்ற ரன் ரேட்டில் ஆடி வந்தனர். எப்படியும் கடைசி 5 ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடி 190 முதல் 2௦௦ரன்கள் வரை டெல்லி அணி எடுக்க திட்டமிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஸ்ரேயாஸ் ஐயர் 15வது ஓவரில் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

தவான் நிதான பேட்டிங்

தவான் நிதான பேட்டிங்

ஷிகர் தவான் பவர்பிளே வரை 115 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும், அதன் பின் 125 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஆடி சோதித்தார். கடைசி 5 ஓவர்களில் 160 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். ஆனால், அவரை விட அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட வீரர்கள் இருந்தும் அவர்களுக்கு வழியும் விடவில்லை அவர்.

அதிரடி மன்னன் ஸ்டோய்னிஸ்

அதிரடி மன்னன் ஸ்டோய்னிஸ்

ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்த உடன் அதிரடி மன்னன் மார்கஸ் ஸ்டோய்னிஸ் பேட்டிங் செய்ய வந்தார். அவர் 8 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். 16வது ஓவரில் ட்ரென்ட் போல்ட் பந்துவீச்சில் அடுத்தடுத்து இரண்டு ஃபோர் அடித்து அசத்தினார்.

ரன் அவுட்

ரன் அவுட்

ஸ்டோய்னிஸ் நல்ல பார்மில் இருந்ததால் டெல்லி பெரிய ஸ்கோர் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், தவான் அவருக்கு ரன் ஓடும் போது ஒத்துழைக்காமல் அவரை ரன் அவுட் செய்தார். 13 ரன்கள் எடுத்த நிலையில் அவர் கோபத்துடன் வெளியேறினார்.

தவான் சொதப்பல்

தவான் சொதப்பல்

ஷிகர் தவான் கடைசி ஓவரில் ஒரு ஃபோர் மட்டுமே அடித்தார். அந்த ஓவரில் டெல்லி 12 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு முந்தைய மூன்று ஓவர்களில் டெல்லி அணி ஒரு முறை கூட 10 ரன்களை தாண்டவில்லை. அதற்கு காரணம் தவான் தான்.

டெல்லி ஸ்கோர்

டெல்லி ஸ்கோர்

ஷிகர் தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 69 ரன்கள் எடுத்து இருந்தார். டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. மும்பை அணிக்கு 163 ரன்கள் என்பது எட்டக் கூடிய இலக்கு என்பதால் தவான் மீது ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

Story first published: Wednesday, October 14, 2020, 21:08 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+