Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. பதறிய பஞ்சாப்.. பொல்லார்டுடன் சேர்ந்து தெறிக்க விட்ட அந்த வீரர்!

துபாய் : மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி 176 ரன்கள் குவித்தது.

முன்னதாக மும்பை சாதாரண வேகத்தில் தான் ரன் குவித்தது. கடைசி நான்கு ஓவர்களை நம்பியே அந்த அணி இருந்தது.

பொல்லார்டு வழக்கம் போல கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடினார். ஆனால், இந்த முறை அவருடன் எதிர்பாராத ஆல் - ரவுண்டர் ஒருவர் அதிரடி ஆட்டம் ஆடினார்.

டாஸ் வென்ற மும்பை

டாஸ் வென்ற மும்பை

மும்பை இந்தியன்ஸ் அணி இந்தப் போட்டியில் டாஸ் வென்றது. அந்த அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால், அந்த அணியின் பேட்டிங் வரிசை மோசமாக செயல்பட்டது. கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார்.

டி காக் அரைசதம்

டி காக் அரைசதம்

டி காக் தன் சிறந்த பார்மை மீண்டும் வெளிப்படுத்தி சிறப்பாக ஆடினார். ஒரு பக்கம் விக்கெட்கள் சரிந்த போதும் அவர் நிலையாக நின்று ஆடினார். தொடர்ந்து மூன்றாவது அரைசதம் அடித்த அவர், 43 பந்துகளில் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

சொதப்பல்

சொதப்பல்

மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பல் ஆட்டம் ஆடினர். சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனார், இஷான் கிஷன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். க்ருனால் பாண்டியா நிதான ஆட்டம் ஆடி 30 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். மும்பை அணி 16.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.

பொல்லார்டு

பொல்லார்டு

அப்போது கீரான் பொல்லார்டு களத்தில் இருந்தார். அவரை நம்பியே மும்பை அணி இருந்தது. அவரது விக்கெட் பறி போனால் மும்பை அணி பாதாளத்தை அடையும் என்ற நிலை இருந்தது. அப்போது அவர் அதிரடி ஆட்டம் ஆடினார். அவருடன் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் நாதன் கோல்டர் நைல் ஆடினார்.

நாதன் கோல்டர் நைல்

நாதன் கோல்டர் நைல்

பொல்லார்டுடன் இணைந்து நாதன் கோல்டர் நைல்-உம் அதிரடி ஆட்டம் ஆடினார். பொல்லார்டு ஒரு பக்கம் சிக்ஸ் அடிக்க, நைல் ஃபோர் அடித்தார். அவர் 12 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார். பொல்லார்டு 12 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார்.

மும்பை ஸ்கோர்

மும்பை ஸ்கோர்

மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. பொல்லார்டு - நாதன் கோல்டர் நைல் ஜோடி 21 பந்துகளில் 57 ரன்கள் குவித்தது. அந்த ஜோடியால் மட்டுமே தத்தளித்த மும்பை மீண்டு பெரிய ஸ்கோர் அடித்தது.

மேக்ஸ்வெல் - ஷமி

மேக்ஸ்வெல் - ஷமி

பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல் கட்டுக் கோப்பாக வீசி 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஷமி 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங் 2, ஜோர்டான் 1, ரவி பிஸ்னோய் 1 விக்கெட் வீழ்த்தினர்.

Story first published: Sunday, October 18, 2020, 22:49 [IST]
Other articles published on Oct 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+