Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி கூட நடக்குமா? முதல் சூப்பர் ஓவரும் டை.. 2 சூப்பர் ஓவர்கள்.. முட்டி மோதி வென்ற பஞ்சாப்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையே ஆன 36வது லீக் போட்டி டை ஆனது.

கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மும்பை வீரர் ட்ரென்ட் போல்ட்டின் துல்லிய பந்துவீச்சில் பஞ்சாப் அணி 8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைய வேண்டிய போட்டியை டை ஆக்கியது. போட்டி சூப்பர் ஓவர் சென்றது. ஒரே நாளில் நடந்த ஒரு போட்டிகளில் டை ஆனதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

மும்பை சறுக்கல்

மும்பை சறுக்கல்

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. மும்பை அணியின் டி காக் சிறப்பாக ஆடி 43 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். க்ருனால் பாண்டியா நிதானமாக 34 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

மும்பை ஸ்கோர்

மும்பை ஸ்கோர்

மும்பை அணி 16.3 ஓவர்களில் 116 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தவித்த போது பொல்லார்டு - கோல்டர் நைல் ஜோடி அதிரடி ஆட்டம் ஆடி மிரட்டியது. இந்த ஜோடி 21 பந்துகளில் 57 ரன்கள் குவித்தது. மும்பை அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் குவித்தது.

பஞ்சாப் பேட்டிங்

பஞ்சாப் பேட்டிங்

அடுத்து பஞ்சாப் அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் ஆடியது. அந்த அணியின் கேப்டன் ராகுல் அதிரடி ஆட்டம் ஆடினார். மயங்க் அகர்வால் 11, கிறிஸ் கெயில் 24, நிக்கோலஸ் பூரன் 24 ரன்கள் எடுத்தனர். மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனார்.

ராகுல் அதிரடி

ராகுல் அதிரடி

ராகுல் 51 பந்துகளில் 77 ரன்கள் குவித்து 18வது ஓவரில் ஆட்டமிழந்தார். தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டான் இணைந்து அணியை வெற்றி பெற வைக்க முயன்றனர். கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வரை அணியை எடுத்துச் சென்றனர்.

போட்டி டை ஆனது

போட்டி டை ஆனது

ட்ரென்ட் போல்ட் வீசிய கடைசி ஓவரில் அந்த ஜோடி 8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதை அடுத்து போட்டி டை ஆனது. தோற்க வேண்டிய போட்டியை மும்பை டை செய்தது. அடுத்து பும்ரா வீசிய சூப்பர் ஓவரில் முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்து 5 ரன்கள் எடுத்தது.

5 ரன்கள்

5 ரன்கள்

அந்த அணியில் பூரன், ராகுல் முதலில் களமிறங்கினர். பூரன் டக் அவுட் ஆனார். அடுத்து ஷமி வீசிய சூப்பர் ஓவரில் ரோஹித், டி காக் பேட்டிங் செய்து சரியாக 5 ரன்கள் எடுத்தனர். கடைசி பந்தில் டி காக் ரன் அவுட் ஆனார். மீண்டும் போட்டி இரண்டாவது சூப்பர் ஓவருக்கு சென்றது.

கீரான் பொல்லார்டு குழப்பம்

கீரான் பொல்லார்டு குழப்பம்

மும்பை அணியில் கீரான் பொல்லார்டு ,மூன்றாவதாக பேட்டிங் செய்ய காத்திருந்தார். விதிப்படி முதல் சூப்பர் ஓவரில் பங்கேற்ற ஆறு பேரும் அடுத்த சூப்பர் ஓவரில் பங்கேற்கக் கூடாது. ஆனாலும், இரண்டாவது சூப்பர் ஓவரில் பொல்லார்டு களமிறங்கினார்.

பஞ்சாப் வெற்றி

பஞ்சாப் வெற்றி

கிறிஸ் ஜோர்டான் வீசிய இரண்டாவது சூப்பர் ஓவரில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 11 ரன்கள் எடுத்தது. அடுத்து ட்ரென்ட் போல்ட் வீசிய சூப்பர் ஓவரில் கிறிஸ் கெயில் அதிரடி சிக்ஸ் அடிக்க பஞ்சாப் அணி 4 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Story first published: Monday, October 19, 2020, 0:29 [IST]
Other articles published on Oct 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+