Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நல்லா ஆடியும் வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்து விட்டார்கள்..மொத்த வெறியையும் கொட்டித் தீர்த்த இளம் வீரர்

அபுதாபி : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் அதிரடி ஆட்டம் ஆடி அதிக ரன்கள் குவித்தார்.

அவர் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

அந்த கோபத்தை தன் ஆட்டத்தில் வெளிக் காட்டினார். அதிரடியாக ரன் குவித்து 45 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்தார்.

படிக்கல் மீது எதிர்பார்ப்பு

படிக்கல் மீது எதிர்பார்ப்பு

2020 ஐபிஎல் தொடர் இளம் வீரர்களுக்கான தொடராக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அணியிலும் உள்ளூர் இளம் வீரர்கள் சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்களுக்கு இணையாக ஆடி பாராட்டைப் பெற்று வருகின்றனர். அதில் முதன் முதலில் அனைவரையும் ஈர்த்த இளம் வீரர் தேவ்தத் படிக்கல்.

முன்னாள் வீரர்கள் பாராட்டு

முன்னாள் வீரர்கள் பாராட்டு

அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தேர்ந்த பேட்ஸ்மேன் போல துவக்க வீரராக களமிறங்கி ரன் குவித்து வந்தார். அவரது ஆட்டத்தை சச்சின் உட்பட அனைத்து முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் புகழ்ந்து, பாராட்டி வந்தனர்.

அணித் தேர்வு

அணித் தேர்வு

அவருக்கு நிச்சயம் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என கருதப்பட்டது. அடுத்து நடக்க உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் அவர் தேர்வு செய்யப்படுவார் கருதப்பட்டது. விராட் கோலி கேப்டன்சியில் அவர் பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ளதால் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு அதிகம் என கருதப்பட்டது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணிகள் அறிவிப்பின் போதுஅவர் பெயர் எந்த அணியிலும் இடம் பெறவில்லை. அது பெரும் ஏமாற்றமாக இருந்தது. ரசிகர்கள் பலரும் அந்த முடிவை விமர்சித்தனர்.

மும்பை போட்டியில் அதிரடி

மும்பை போட்டியில் அதிரடி

இந்த நிலையில் அடுத்து நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் படிக்கல் பங்கேற்றார். அந்தப் போட்டியில் கோலி, டிவில்லியர்ஸ் உள்ளிட்ட வீரர்களே தடுமாறிய நிலையில், படிக்கல் மிரட்டலாக அதிரடி ஆட்டம் ஆடினார்.

பதிலடி

பதிலடி

45 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். அவரது அதிரடி ஆட்டத்தால் மட்டுமே பெங்களூர் அணி நல்ல ஸ்கோரை எடுத்தது. இது தான் இந்த ஐபிஎல் சீசனில் அவரது அதிகபட்ச ஸ்கோர். அணியில் தன்னை காத்திருப்பு பட்டியலில் வைத்த கோபத்தை மொத்தமாக இந்தப் போட்டியில் காட்டினார்.

400 ரன்கள்

400 ரன்கள்

2020 ஐபிஎல் தொடரில் படிக்கல் 400 ரன்கள் கடந்துள்ளார். முதல் ஐபிஎல் சீசனில் ஒரு இளம் வீரராக 400 ரன்களை கடந்து ரன் குவித்து சாதனை புரிந்துள்ளார் தேவ்தத் படிக்கல். இந்த முறை தவறவிட்டாலும் எதிர்காலத்தில் இந்திய அணியில் தேவ்தத் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

பெங்களூர் ஸ்கோர்

பெங்களூர் ஸ்கோர்

பெங்களூர் அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்தது. அணியின் ஸ்கோரில் கிட்டத்தட்ட பாதியை படிக்கல் அடித்திருந்தார். இந்தப் போட்டியில் விராட் கோலி 14 பந்துகளில் 9 ரன்களும், டிவில்லியர்ஸ் 15 ரன்களும் மட்டுமே எடுத்திருந்தனர்.

Story first published: Wednesday, October 28, 2020, 23:13 [IST]
Other articles published on Oct 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+