Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி போட்ட திட்டம்.. வலையில் சிக்கிய மும்பை இந்தியன்ஸ் டீம்.. என்ன நடக்கப் போகுதோ?

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரின் 48வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பியதாக கூறினார்.

கோலி திட்டமிட்டது போலவே மும்பை அணி பெங்களூர் அணிக்கு சாதகமாக பேட்டிங் செய்ய வாய்ப்பளித்துள்ளது.

லீக் போட்டி

லீக் போட்டி

மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே ஆன 48வது லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்றது. அந்த அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது.

ரோஹித் இல்லை

ரோஹித் இல்லை

இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெறவில்லை. அவர் கடந்த இரண்டு லீக் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கீரான் பொல்லார்டு கேப்டன் பதவி வகித்தார்.

விராட் கோலி திட்டம்

விராட் கோலி திட்டம்

விராட் கோலி இந்தப் போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்றே திட்டமிட்டுள்ளார். அதன்படி, மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. கோலி இது குறித்து டாஸ் நிகழ்வின் போது பேசினார்.

பெங்களூர் அணி மாற்றம்

பெங்களூர் அணி மாற்றம்

பெங்களூர் அணியில் நவ்தீப் சைனி, ஆரோன் பின்ச், மொயீன் அலி அணியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் சிவம் துபே, ஜோஷ் பிலிப், டேல் ஸ்டெய்ன் அணியில் இடம் பெற்றுள்ளனர். மும்பை அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

Story first published: Wednesday, October 28, 2020, 20:14 [IST]
Other articles published on Oct 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+