Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னமா யார்க்கர் போடுறார்.. சமாளிக்க முடியலை.. ஆர்சிபி திணறல்.. ஏமாற்றிய கோலி, டிவில்லியர்ஸ்!

அபுதாபி : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங்கில் திணறியது.

மற்ற பந்துவீச்சாளர்களை சமாளித்தாலும் பும்ராவை சமாளிக்க முடியாமல் திணறியது பெங்களூர் அணி.

தேவ்தத் படிக்கல் மட்டுமே சிறப்பாக ஆடினார். பிலிப் ஓரளவு ரன் குவித்தார். விராட் கோலி, டிவில்லியர்ஸ் சொதப்பலாக ஆடினர்.

டாஸ் வென்ற மும்பை

டாஸ் வென்ற மும்பை

இந்தப் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்றது. அந்த அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்யவே திட்டமிட்ட நிலையில், மும்பை அணியின் டாஸ் முடிவால் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சி தெரிவித்தார்.

படிக்கல் அதிரடி

படிக்கல் அதிரடி

பெங்களூர் அணியின் துவக்க வீரர்கள் ஜோஷ் பிலிப் மற்றும் தேவ்தத் படிக்கல் அபார துவக்கம் அளித்தனர். பிலிப் 24 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார். படிக்கல் அதிரடி ஆட்டம் ஆடி அரைசதம் கடந்தார். 45 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார்.

சரிந்த பெங்களூர்

சரிந்த பெங்களூர்

அடுத்து பெங்களூர் அணியின் விக்கெட்கள் வேகமாக சரிந்தது. பும்ரா மற்றும் க்ருனால் பாண்டியா ஓவர்களில் ரன் எடுக்க முடியாமல் திணறியது பெங்களூர் அணி. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். 131 முதல் 138 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணி 4 விக்கெட்களை இழந்தது.

கோலி, டிவில்லியர்ஸ் ஏமாற்றம்

கோலி, டிவில்லியர்ஸ் ஏமாற்றம்

குறிப்பாக நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ஏபி டிவில்லியார்ஸ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். கோலி 9, டிவில்லியர்ஸ் 15 ரன்கள் மட்டுமே எடுத்தனர். கோலி 14 பந்துகள் ஆடி 9 ரன்களில் ஆட்டமிழந்தது அந்த அணியின் ரன் ரேட்டை குறைத்தது.

பும்ரா மிரட்டல்

பும்ரா மிரட்டல்

பும்ரா மிரட்டலாக பந்து வீசினார். 4 ஓவர்கள் வீசிய அவர் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். ஒரு ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தி மெய்டனாகவும் வீசி மிரள வைத்தார். அவரது யார்க்கர் பந்துகளால் பெங்களூர் அணி தடுமாறியது.

பெங்களூர் ஸ்கோர்

பெங்களூர் ஸ்கோர்

பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழந்து 164 ரன்கள் குவித்தது. படிக்கல், பிலிப் ஆட்டத்தால் பெங்களூர் அணி தப்பித்தது. மும்பை அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அபுதாபியில் 195 ரன்களை கூட சேஸிங் செய்து இருப்பதால் இது குறைந்த ஸ்கோர் என கருதப்படுகிறது.

Story first published: Wednesday, October 28, 2020, 22:22 [IST]
Other articles published on Oct 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+