Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

8 ரன்கள், 4 விக்கெட், டபுள் விக்கெட் மெய்டன்.. வேகத்தில் சிக்கி மிரண்ட பெங்களூர்!

அபுதாபி : மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சில் சிக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தடுமாறியது.

அந்த அணி பும்ரா, ட்ரென்ட் போல்ட், பொல்லார்டு வேகத்தில் வரிசையாக விக்கெட்களை இழந்தது.

எனினும், பெங்களூர் அணி சமாளித்து 164 ரன்கள் குவித்தது. பும்ரா இந்தப் போட்டியில் துல்லியமான பந்துவீச்சால் மிரட்டினார்.

பெங்களூர் அணி பேட்டிங்

பெங்களூர் அணி பேட்டிங்

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அபுதாபியில் நடந்த இந்தப் போட்டியில் 180 முதல் 200 ரன்கள் வரை எடுப்பதே நல்ல ஸ்கோராக கருதப்பட்டது. கடந்த போட்டியில் இதே ,மைதானத்தில் மும்பை அணி 195 ரன்கள் எடுத்தும் தோல்வி அடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

படிக்கல் அதிரடி

படிக்கல் அதிரடி

பெங்களூர் அணியின் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் அதிரடியாக ஆடி 45 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். இதுவே அவரது அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர். ஜோஷ் பிலிப்பும் துவக்கத்தில் 33 ரன்கள் சேர்த்தார். முதல் விக்கெட்டுக்கு பெங்களூர் அணி 71 ரன்கள் சேர்த்தது.

கோட்டை விட்ட மும்பை

கோட்டை விட்ட மும்பை

முதல் 10 ஓவர்களில் கோட்டை விட்டாலும் அடுத்த 10 ஓவர்களில் விக்கெட் வேட்டை நடத்தியது மும்பை அணி. 180 ரன்களுக்கு மேல் பெங்களூர் அணி எடுக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் அந்த அணியை 164 ரன்களுடன் தடுத்து நிறுத்தியது மும்பை.

8 ரன்களில் 4 விக்கெட்கள் காலி

8 ரன்களில் 4 விக்கெட்கள் காலி

ஒரு கட்டத்தில் 8 ரன்கள் இடைவெளியில் 4 விக்கெட்கள் வீழ்த்தியது மும்பை. பெங்களூர் அணி 131 ரன்கள் எடுத்த நிலையில் பொல்லார்டு பந்துவீச்சில் டிவில்லியர்ஸ் விக்கெட்டை இழந்தது. அடுத்து பும்ரா ஓவரில் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

பும்ரா மெய்டன் ஓவர்

பும்ரா மெய்டன் ஓவர்

17வது ஓவரின் 3வது பந்தில் சிவம் துபேவும், 5வது பந்தில் தேவ்தத் படிக்கல்லும் ஆட்டமிழந்தனர். அந்த ஓவரை மெய்டன் ஓவராக வீசினார் பும்ரா. அது டபுள் விக்கெட் மெய்டனாக அமைந்தது. அடுத்து 18வது ஓவரின் 2 வது பந்தில் கிறிஸ் மோரிஸ் விக்கெட்டை சாய்த்தார் போல்ட்.

100 விக்கெட்

100 விக்கெட்

மும்பை அணியின் வேகத்தில் மிரண்டது மும்பை. முன்னதாக விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் தன் 100 வது விக்கெட்தை வீழ்த்தி சாதனை படைத்து இருந்தார் பும்ரா. அவர் இந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 1 மெய்டன் ஓவர் வீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.

பெங்களூர் ஸ்கோர்

பெங்களூர் ஸ்கோர்

பெங்களூர் அணி இந்தப் போட்டியில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 164 ரன்கள் குவித்தது. மும்பை அணி கடைசி 10 ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தாமல் விட்டு இருந்தால் பெங்களூர் அணி 180 ரன்களை எளிதாக கடந்திருக்கும்.

Story first published: Wednesday, October 28, 2020, 23:44 [IST]
Other articles published on Oct 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+