Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 வருசமா வெயிட் பண்றேன்..டீமில் எடுக்க முடியாதா? கோலி டீமை பிளந்து கட்டிய மும்பை வீரர்.. பரபர ஆட்டம்

அபுதாபி : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் இடையே ஆன போட்டி இரு உள்ளூர் வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் சுவாரசியமாக மாறியது.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத இரு இளம் வீரர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி அதிரடி ஆட்டம் ஆடி இருந்தனர்.

அதில் ஒருவர் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல். மற்றொருவர் சூர்யகுமார் யாதவ்.

தேவ்தத் படிக்கல்

தேவ்தத் படிக்கல்

தேவ்தத் படிக்கல் முதலில் பெங்களூர் அணி ஆடிய போது 45 பந்துகளில் 74 ரன்கள் குவித்து இருந்தார். அவருக்கு இதுதான் முதல் ஐபிஎல் சீசன். அவருக்கு இன்னும் கூட இந்திய அணியில் இடம் பெற காலம் உள்ளது. ஆனால், சூர்யகுமார் நிலை தான் படுமோசம்.

வாய்ப்பு கிடைக்கவில்லை

வாய்ப்பு கிடைக்கவில்லை

30 வயதான நிலையில் அவர் இன்னும் இந்திய அணியில் வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் தொடரிலும், உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வருகிறார். ஆனாலும், அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ரசிகர்கள் பொங்கி எழுந்தனர்

ரசிகர்கள் பொங்கி எழுந்தனர்

சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஆட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சூர்யகுமார் யாதவ் பெயர் இடம் பெறாத போது ரசிகர்கள் பொங்கி எழுந்தனர். இன்னும் எத்தனை ஆண்டுகள் அவர் காத்திருக்க வேண்டும் என குரலெழுப்பினர்.

மிரட்டல் ஆட்டம்

மிரட்டல் ஆட்டம்

இந்த நிலையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி தலைமையில் செயல்படும் பெங்களூர் அணிக்கு எதிராக அவர் மிரட்டல் ஆட்டம் ஆடினார். 165 ரன்களை மும்பை அணி சேஸிங் செய்தது. மற்ற பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்த நிலையில் அவர் மட்டும் நிலையாக நின்று ஆடினார்.

79 ரன்கள்

79 ரன்கள்

43 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார் சூர்யகுமார். 10 ஃபோர், 3 சிக்ஸ் அடித்தார். கடைசி வரை களத்தில் நின்று மும்பை அணியை 19.1 ஓவரில் வெற்றி பெற வைத்தார். இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் அவரே வென்றார்.

Story first published: Thursday, October 29, 2020, 1:47 [IST]
Other articles published on Oct 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+