For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வார்னர் போராட்டம் வீண்.. கைவிட்ட மிடில் ஆர்டர்.. மும்பையிடம் செம அடி வாங்கிய ஹைதராபாத்!

ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, 34 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து 208 ரன்கள் குவித்தது.

அடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இரண்டு முக்கிய மாற்றங்கள்

இரண்டு முக்கிய மாற்றங்கள்

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டது. புவனேஸ்வர் குமார், கலீல் அஹ்மது நீக்கப்பட்டனர். இவர்கள் இருவருக்கு பதிலாக சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல் அணியில் இடம் பெற்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது, ஷார்ஜா மைதானத்தில் எளிதாக 200 ரன்களை கடக்க முடியும் என்பதால் மும்பை அணி அதிரடி ஆட்டம் ஆடும் என எதிர்பார்க்கப்பட்டது.

மும்பை பேட்டிங்

மும்பை பேட்டிங்

மும்பை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ரோஹித் சர்மா ஒரே ஒரு சிக்ஸ் அடித்து 6 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன் பின் சூர்யகுமார் யாதவ் 27, டி காக் 67, இஷான் கிஷன் 31 ரன்கள் எடுத்தனர். 15 ஓவர்களில் மும்பை அணி 147 ரன்கள் எடுத்து இருந்தது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

கடைசி 5 ஓவர்களில் மும்பை அணி பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா அதிரடியால் வேகமாக ரன் சேர்த்தது. ஹர்திக் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி நான்கு பந்துகளில் க்ருனால் பாண்டியா 20 ரன்கள் எடுத்தார்.

மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர்

மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர்

கீரான் பொல்லார்டு 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தும், க்ருனால் 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 208 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணியில் நடராஜன் 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்ததும், ரஷித் கான் 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தனர்.

அதிரடி துவக்கம்

அதிரடி துவக்கம்

இமாலய இலக்கை சேஸிங் செய்த ஹைதராபாத் அணிக்கு பேர்ஸ்டோ - வார்னர் அதிரடி துவக்கம் அளித்தனர். பேர்ஸ்டோ 25 ரன்கள் சேர்த்தார். மனிஷ் பாண்டேவும் அதிரடி ஆட்டம் ஆடி 30 ரன்கள் குவித்தார். வார்னர் நிதானமாக துவங்கி பின் அதிரடி ஆட்டம் ஆடினார்.

வார்னர் அவுட்

வார்னர் அவுட்

ஆனால், மிடில் ஆர்டரில் கேன் வில்லியம்சன் 3 ரன்களிலும், ப்ரியம் கார்க் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அடுத்து டேவிட் வார்னர் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போதே ஹைதராபாத் தோல்வி உறுதி ஆனது. அப்துல் சமத் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முயற்சி செய்து வீழ்ந்தார்.

மும்பை வெற்றி

மும்பை வெற்றி

ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷார்ஜா மைதானத்தில் இந்த சீசனில் 200 ரன்களை எட்டாத ஒரே அணி ஹைதராபாத் மட்டுமே.

Story first published: Sunday, October 4, 2020, 20:12 [IST]
Other articles published on Oct 4, 2020
English summary
IPL 2020 News in Tamil : Mumbai Indians vs Sunrisers Hyderabad 17th match result
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+