Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தம்பி விக்கெட்டை எடுத்த பவுலர்.. நாலே பந்தில் காலி செய்த அண்ணன்.. படுமோசமான ஐபிஎல் சாதனை!

ஷார்ஜா : இந்த சீசனில் தன் முதல் போட்டியில் ஆடினார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சித்தார்த் கவுல்.

வேகப் பந்துவீச்சாளரான அவரது ஓவர்களில் மும்பை அணி சரமாரியாக ரன் குவித்தது.

அதிலும் கடைசி ஓவரில் தன் தம்பி ஹர்திக் பாண்டியா விக்கெட்டை வீழ்த்திய பின் வந்த க்ருனால் பாண்டியா பவுண்டரி அடித்துத் தள்ளினார். சித்தார்த் இந்த சீசனின் மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார்.

மும்பை - ஹைதராபாத் போட்டி

மும்பை - ஹைதராபாத் போட்டி

மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே ஆன ஐபிஎல் லீக் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. அந்த மைதானத்தில் எளிதாக பவுண்டரி அடிக்கலாம் என்பதால் பந்துவீச்சாளர்கள் நிலைமை அங்கே பரிதாபமாக உள்ளது.

சித்தார்த் கவுல்

சித்தார்த் கவுல்

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியில் காயத்தில் சிக்கிய புவனேஸ்வர் குமார், கலீல் அஹ்மது நீக்கப்பட்டு சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா அணியில் சேர்க்கப்பட்டனர். இந்த சீசனில் இதுதான் வேகப் பந்துவீச்சாளர் சித்தார்த் கவுல்-இன் முதல் போட்டி.

மும்பை அதிரடி

மும்பை அதிரடி

மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி துவக்கம் முதலே ஓவருக்கு 10 ரன்கள் என்ற அளவில் ரன் குவித்து வந்தது. சித்தார்த் கவுல் தன் முதல் ஓவரில் 19 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.

சித்தார்த் பந்துவீச்சு

சித்தார்த் பந்துவீச்சு

அடுத்து அவர் 3 ஓவர்களில் 43 ரன்கள் கொடுத்து இருந்தார். எப்படியும் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஓவரில் அதிக ரன்கள் குவிக்கும் என்ற நிலையில், சித்தார்த் கவுல் கடைசி ஓவரை வீசினார். ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு களத்தில் இருந்தனர்.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் பவுல்டு அவுட் ஆனார். அடுத்து அவரது அண்ணன் க்ருனால் பாண்டியா பேட்டிங் செய்ய வந்தார். அவர் கடைசி நான்கு பந்துகளை தானே முழுமையாக சந்தித்து சித்தார்த்தை பழி தீர்த்தார்.

4 பந்தில் 20 ரன்

4 பந்தில் 20 ரன்

கடைசி நான்கு பந்துகளில் இரண்டு சிக்ஸ், இரண்டு ஃபோர் அடித்தார் க்ருனால் பாண்டியா. நான்கு பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார் அவர். அந்த கடைசி ஓவரில் மட்டும் சித்தார்த் 21 ரன்கள் கொடுத்தார். 2 விக்கெட் வீழ்த்தினாலும் அவர் மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார்.

மோசமான பந்துவீச்சு

மோசமான பந்துவீச்சு

2020 ஐபிஎல் தொடரில் ஷார்ஜாவில் பந்துவீசும் பல பந்துவீச்சாளர்கள் தங்களின் மோசமான பந்துவீச்சை பதிவு செய்துள்ளனர். மோசமான பந்துவீச்சில் முதல் இடத்தை பெற்றுள்ளார் சித்தார்த் கவுல். 4 ஓவர்களில் 64 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

டேல் ஸ்டெய்ன்

டேல் ஸ்டெய்ன்

இதற்கு முன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் ஷார்ஜாவில் 4 ஓவர்களில் 57 ரன்கள் கொடுத்து இந்த சீசனின் மோசமான பந்துவீச்சை பதிவு செய்து இருந்தார். அவரது மோசமான சாதனையை முறியடித்துள்ளார் சித்தார்த்.

Story first published: Sunday, October 4, 2020, 23:24 [IST]
Other articles published on Oct 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+