Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாராலும் முடியவில்லை.. அசால்ட்டாக செய்து முடித்து.. ஐபிஎல் அரங்கை தெறிக்கவிட்ட தமிழக வீரர்!!

ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் நடராஜன் சிறப்பாக பந்து வீசி வியப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இத்தனை நாள் இவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்ற கேள்வியை கேட்க வைத்தது தான் அவரது சாதனை.

தற்போது போட்டிக்கு போட்டி அவர் வியப்பை ஏற்படுத்தி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஷார்ஜாவில் ஒரு ஓவரில் மிக குறைந்த ரன்கள் கொடுத்து சர்வதேச பந்துவீச்சாளர்களையே மிரள வைத்துள்ளார்.

யார் இந்த நடராஜன்?

யார் இந்த நடராஜன்?

நடராஜன் சேலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர். டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் ஆடி வந்த அவர் அடையாளம் காணப்பட்டு தமிழக அணியில் இடம் பெற்றார். அதன் பின் டிஎன்பிஎல் தொடரில் வாய்ப்பு பெற்று சிறப்பாக செயல்பட்டார்.

ஐபிஎல் வாய்ப்பு

ஐபிஎல் வாய்ப்பு

2017ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை அடையாளம் கண்டு பெரிய தொகைக்கு வாங்கியது. அவரால் அந்த தொடரில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. பின் ஹைதரபாத் அணியால் வாங்கப்பட்டார். அந்த அணியில் இரண்டு ஆண்டுகள் வாய்ப்பு இன்றி வெளியே அமர வைக்கப்பட்டார்.

வார்னரின் நம்பிக்கை

வார்னரின் நம்பிக்கை

இந்த நிலையில், 2020இல் டேவிட் வார்னர் அவர் மீது நம்பிக்கை வைத்து அணியில் புவனேஸ்வர் குமாருக்கு அடுத்த இடத்தில் முழு நேர வேகப் பந்துவீச்சாளராக தேர்வு செய்தார். முதல் போட்டி முதல் தன் யார்க்கர் பந்துவீச்சால் வார்னரின் நம்பிக்கையை காப்பாற்றி வருகிறார்.

பாராட்டு

பாராட்டு

சர்வதேச பேட்ஸ்மேன்களையே திணற வைத்து வருவதால் கவனத்தை ஈர்த்துள்ளார். சேவாக் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் அவரை பாராட்டி உள்ளனர். இதை அடுத்து அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.

மும்பை போட்டி

மும்பை போட்டி

இதற்கிடையே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்றார். அந்தப் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. அந்த மைதானத்தில் எளிதாக ஃபோர், சிக்ஸ் அடிக்கலாம். சிறிய பவுண்டரி எல்லை கொண்ட மைதானம். அந்த மைதானத்தில் பந்துவீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு கீழ் ரன் கொடுத்தாலே சிறந்த பந்துவீச்சு என கருதப்படுகிறது.

வெறும் 1 ரன்

வெறும் 1 ரன்

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டாவது ஓவரை வீசிய அவர் வெறும் 1 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஷார்ஜா மைதானத்தில் இந்த சீசனில் மிக குறைந்த ரன் கொடுக்கப்பட்ட ஓவர் இதுதான்.

சாதனை

சாதனை

சர்வதேச வீரர்களே ஷார்ஜா மைதானத்தில் திக்கித் திணறி வருகின்றனர். அதிக ரன்களை வாரி இறைத்து வருகின்றனர். இந்த நிலையில் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ள நடராஜன் சிறப்பாக வீசி 1 ரன் மட்டுமே கொடுத்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Sunday, October 4, 2020, 16:53 [IST]
Other articles published on Oct 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+