Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தேசிய கீதம் பாடும் போதே கண்ணீர் விட்டவர்.. அவரை இப்படி பேசலாமா? ஆர்சிபி வீரருக்கு இப்படி ஒரு நிலையா?

துபாய்: பெங்களூர் அணியின் இளம் வீரர் முகமது சிராஜ் பவுலிங்கை இணையத்தில் பலரும் கிண்டல் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முதல் நாள் பெங்களூருக்கும் பஞ்சாப்பிற்கும் இடையில் நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் படுதோல்வி அடைந்தது. நன்றாக சென்று கொண்டு இருந்த போட்டியில் மோசமான பவுலிங் காரணமாக பெங்களூர் அணி தோல்வி அடைந்தது.

டெத் ஓவர்களில் பெங்களூர் வீரர்கள் சரியாக பந்து வீசவில்லை என்று கடந்த சில சீசன்களாக புகார் வைக்கப்பட்டுள்ளது. கடந்த போட்டியிலும் பெங்களூர் பவுலர்கள் டெத் ஓவர்களில் மோசமாக பந்து வீசியதால் பஞ்சாப் எளிதாக வெற்றிபெற்றது.

சிராஜ்

சிராஜ்

அதிலும் டெத் ஓவர்களில் பெங்களூர் வீரர் சிராஜ் போட்ட பவுலிங்தான் மொத்தமாக போட்டியையே மாற்றியது. சிராஜின் ஓவரில் 20 ரன்கள் சென்றது. அந்த போட்டியில் வெறும் 3 ஓவர்கள் வீசிய முகமது சிராஜ் 44 ரன்களை வாரி வழங்கினார். ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. பெங்களூர் அணியின் தோல்விக்கு இவர் முக்கியமான காரணமாக இருந்தார்.

கிண்டல்

கிண்டல்

இந்த நிலையில் ஆர்சிபி தோல்வியை தொடர்ந்து முகமது சிராஜை ஆர்சிபி ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். இவரால்தான் பெங்களூர் அணியே தோல்வி அடைந்தது. இவர் போட்ட மோசமான பவுலிங்கால்தான் அணியே தோல்வி அடைந்தது. இவருக்கு பவுலிங் செய்யவே வரவில்லை. இவரை எல்லாம் எதற்கு அணியில் வைத்திருக்கிறீர்கள் என்று கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

விமர்சனம்

விமர்சனம்

இன்னும் சிலர் சிராஜை மிக மோசமாக கிண்டல் செய்து விமர்சனங்களை செய்து இருந்தனர். பெங்களூர் அணிக்கும் பவுலர்களுக்கும் எப்போதும் நீண்ட தூரம் என்றுதான் சொல்ல வேண்டும். பெங்களூர் அணியை சேர்ந்த உமேஷ் யாதவும் சரி , இதற்கு முன் பவுலிங் செய்து வந்த டின்டாவும் சரி.. இரண்டு பேருமே சரியாக பவுலிங் செய்தது கிடையாது.

தோல்வி

தோல்வி

பல முறை பெங்களூர் அணியின் தோல்விக்கு இவர்கள் காரணமாக இருந்துள்ளனர். கடந்த சீசன்களில் இவர்களை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இதனால் டிண்டா இப்போது கிரிக்கெட் வாய்ப்பே கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார். உமேஷ் யாதவும் அணிக்குள் வாய்ப்பு கிடைக்காமல் அவதிப்படுகிறார். தற்போது முகமது சிராஜையும் இதேபோல்தான் கடுமையாக விமர்சனம் செய்து கிண்டலடித்து வருகிறார்கள்.

கிரிக்கெட் வாழ்க்கை

கிரிக்கெட் வாழ்க்கை

இந்த தொடர் விமர்சனங்கள் காரணமாக சிராஜுக்கு அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பு கிடைக்குமா என்பதே சந்தேகம் ஆகியுள்ளது. தொடர் விமர்சனங்கள் காரணமாக இவரின் கிரிக்கெட் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது. முகமது சிராஜ் வறுமையான குடும்ப பின்னணியை கொண்டவர். ரஞ்சி கோப்பை போட்டிகளில் 2015ல் இவர் ஆடி தனது திறமையை நிரூபித்தார்.

2017 இந்திய அணி

2017 இந்திய அணி

தொடர்ந்து ரஞ்சி கோப்பையில் நன்றாக ஆடியவர் 2017ல் ஹைதராபாத் அணியால் 2 கோடிக்கு எடுக்கப்பட்டார். 2018ல் இவர் பெங்களூர் அணியால் எடுக்கப்பட்டார். 2017ல் இந்திய அணிக்கு தேர்வான முதல் போட்டியில் முகமது சிராஜ் தேசிய கீதம் ஒலிக்கும் போதே கண்ணீர்விட்டார்.

வறுமை

வறுமை

இவரின் அப்பா ஆட்டோ டிரைவர். முழுக்க முழுக்க திறமை மூலம் மட்டுமே சிராஜுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தது. அப்படிப்பட்ட வீரர் ஒரே ஒரு நாள், அதிலும் ஒரு ஓவர் தவறாக பந்து வீசிய காரணத்தால் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். நெட்டிசன்களின் விமர்சனம் டிண்டாவின் கிரிக்கெட் வாழ்க்கையையே காலி செய்தது.. அதே நிலை சிராஜுக்கு ஏற்பட்டுவிட கூடாது.

Story first published: Saturday, October 17, 2020, 15:16 [IST]
Other articles published on Oct 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+