சிஎஸ்கே வீரர்களுக்கு கொரோனா எதிரொலி... சிஎஸ்கே -மும்பை இந்தியன்ஸ் துவக்க ஆட்டம் டவுட்!
துபாய் : சிஎஸ்கே வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ள நிலையில் தற்போது ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே இடையிலான துவக்க ஆட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.
Recommended Video
கடந்த முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரன்னர் அப் அணி சிஎஸ்கே இடையில் முதல் போட்டி நடைபெறவிருந்தது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பால் வீரர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 13 பேர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் முதல் போட்டியில் சிஎஸ்கே பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிஎஸ்கே பங்கேற்பதில் சிக்கல்
கடந்த முறை ஐபிஎல் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் ரன்னர் அப் அணியான சிஎஸ்கே இடையில் இந்த ஆண்டிற்கான முதல் ஐபிஎல் போட்டி நடைபெறும் என்று கூறப்பட்டது. வரும் 19ம் தேதி இந்த போட்டி துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த முதல் போட்டியில் சிஎஸ்கே பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட வீரர்கள்
சிஎஸ்கே அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் இரண்டு வீரர்கள் மற்றும் 11 ஊழியர்களுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தற்போது 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் வரும் 19ம் தேதி துவங்கவுள்ள ஐபிஎல்லின் முதல் போட்டியில் சிஎஸ்கே பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.

சிஎஸ்கேவிற்கு பதில் ஆர்சிபி?
ஐபிஎல்லின் முதல் போட்டி இரண்டு வலிமையான அணிகளுக்கிடையில் நடத்தப்படுவது சிறப்பானதாக இருக்கும். இந்நிலையில் தோனியின் சிஎஸ்கே அணி முதல் போட்டியில் விளையாட முடியாததால், அடுத்ததாக விராட் கோலியின் ஆர்சிபி அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் முதல் போட்டியில் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புகார் தெரிவிக்கும் ஐபிஎல் அணிகள்
இத்தகைய சூழலில் போட்டிகளின் அட்டவணையையும் பிசிசிஐ வெளியிடாமல் உள்ளது. இந்நிலையில் துபாயில் முகாமிட்டுள்ள ஐபிஎல் அணிகள் பல்வேறு குளறுபடிகளையும் சந்தித்து வருவதாக புகார் தெரிவித்துள்ளது. பயிற்சி ஆட்டத்தின்போது விளக்குகள் நின்றது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தினமும் சந்தித்து வருவதாக ஐபிஎல் அணிகள் புகார் தெரிவித்துள்ளன. இதுகுறித்தெல்லாம் கேட்டு பதிலளிக்க பிசிசிஐ -ஐபிஎல் நிர்வாகத்தினருக்கு நேரமில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளன.


Click it and Unblock the Notifications