Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரேயர் ஆன்ட்டி வந்தாச்சு.. செம குஷியில் மும்பை இந்தியன்ஸ்.. அட யாருப்பா அந்த லக்கி ஆன்ட்டி?

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

இந்தப் போட்டியின் இடையே மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்தனர்.

அதற்கு காரணம், பார்வையாளர்கள் பகுதியில் இருந்த பிரேயர் ஆன்ட்டி. அட யாருப்பா அந்த ஆன்ட்டி?

மும்பை இந்தியன்ஸ் அணி

மும்பை இந்தியன்ஸ் அணி

மும்பை இந்தியன்ஸ் அணி தான் 2020 ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரே அணி. லீக் சுற்றில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த அந்த அணி. பிளே-ஆஃப் சுற்றிலும் முதல் தகுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

2017 இறுதிப் போட்டி

அந்த முதல் தகுதிப் போட்டியில் தான் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் பிரேயர் ஆன்ட்டியை பார்த்தார்கள். அவர் ஏற்கனவே அவர்களுக்கு அறிமுகம் ஆனவர் தான். 2017 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி தவித்த போது அவர் அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

வெற்றி கிடைத்தது

அந்தப் போட்டியில் புனே அணிக்கு 5 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது இந்த பிரேயர் ஆன்ட்டி கண்களை மூடிக் கொண்டு கடவுளை வேண்டிக் கொள்ள துவங்கினார். அந்தப் போட்டியில் மும்பை அணி நூலிழையில் வெற்றி பெற்றது.

அபிஷேக் பச்சன் சொன்ன தகவல்

அபிஷேக் பச்சன் சொன்ன தகவல்

அப்போது இவரது வேண்டுதலால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தான் அந்த ஆன்ட்டி யார் என்ற விவரத்தை கூறி அனைவரையும் அதிர வைத்தார்.

யார் தெரியுமா?

யார் தெரியுமா?

அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானியின் தாயார். மற்றொரு வகையில் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் மாமியார். அவர் தான் அத்தனை எளிமையாக அமர்ந்து மும்பை அணியின் வெற்றிக்காக வேண்டிக் கொண்டார்.

மீண்டும் வந்த லக்கி ஆன்ட்டி

மீண்டும் வந்த லக்கி ஆன்ட்டி

அந்த லக்கி ஆன்ட்டி மீண்டும் தற்போது 2020 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பயணிக்கத் துவங்கி உள்ளார். அவரது வரவால் மும்பை இந்தியன்ஸ் அணி தான் இந்த சீசனில் ஐபிஎல் கோப்பை வெல்லப் போகிறது என அனைவரும் கூறத் துவங்கி உள்ளனர்.

அனுமதி?

அனுமதி?

சரி.. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐபிஎல் அணிகள் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் நிலையில் இவருக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? என்ற கேள்வி சில ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. ஆனால், இதில் எந்த விதிமீறலும் இல்லை.

அனுமதி உண்டு

அனுமதி உண்டு

ஐபிஎல் அணிகளை சார்ந்த அனைவரும் தங்கள் குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்லலாம் என பிசிசிஐ தன் விதிமுறையில் கூறி உள்ளது, அந்த வகையில் அவர் பாதி தொடருக்கு பின் தன் மகள் நீதா அம்பானியை காண போதிய முன்னெச்சரிக்கைகளுடன் வந்திருக்கக் கூடும்.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

மும்பை இந்தியன்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்த நிலையில், அடுத்து பிளே-ஆஃப் சுற்றில் நடக்க உள்ள இரண்டு போட்டிகளுக்கு பின்பு தான் மும்பை அணியை சந்திக்க உள்ள அணி எது என்பது தெரியும்.

Story first published: Friday, November 6, 2020, 18:44 [IST]
Other articles published on Nov 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+