Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தயாரானது சிஎஸ்கே.. நீக்கப்படும் ஜாதவ்.. அணிக்குள் வரும் டிஎன்பிஎல் புலி.. தோனி எடுக்க போகும் முடிவு

துபாய்: நாளை பெங்களூருக்கு எதிராக நடக்கும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் கேதார் ஜாதவ் இடம்பெற மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

2020 ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி அடைந்து வருகிறது. சிஎஸ்கே அணி இந்த தொடரில் எளிதான போட்டிகளில் கூட தோல்விகளை தழுவி வருகிறது. முதலில் மும்பைக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றி அடைந்தது.

அதன்பின் வரிசையாக டெல்லி, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகளிடம் தோல்வி அடைந்தது. பஞ்சாப்பிடம் வெற்றிபெற்ற சிஎஸ்கே மீண்டும் கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்தது.

காரணம்

காரணம்

சிஎஸ்கேவின் தொடர் தோல்விகளுக்கு அணியின் பேட்டிங் ஆர்டர் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்புவதே அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே தோல்வி அடைந்த 4 போட்டிகளிலும் அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. அதிலும் தோனி, ஜாதவ் பேட்டிங் மிக மோசமாக இருந்தது.

ஜாதவ்

ஜாதவ்

அதிலும் கேதார் ஜாதவ் பேட்டிங் கடந்த 6 போட்டிகளிலும் சொதப்பியது. இவர் கடந்த 30 போட்டிகளாக ஐபிஎல்லில் மிக மோசமாக ஆடி வருகிறார். இவர் சரியாக பீல்டிங்கும் செய்வது இல்லை. அதேபோல் இவருக்கு இப்போதெல்லாம் பவுலிங் வாய்ப்பும் வழங்கப்படுவது இல்லை. இதனால் இவர் அணிக்குள் ஏன் இருக்கிறார் என்று கேள்வி எழுந்துள்ளது.

நீக்க வேண்டும்

நீக்க வேண்டும்

கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் இவரின் பேட்டிங் எரிச்சல் ஊட்டும் விதத்தில் இருந்தது. சிஎஸ்கேவின் தோல்விக்கு இதுவே காரணமாக இருந்தது. இதனால் ஜாதவை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் கடந்த ஒரு வாரமாக ரசிகர்கள் இது தொடர்பாக கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள்.

கோரிக்கை

கோரிக்கை

இந்த நிலையில் ஜாதவை அணியில் இருந்து நீக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது என்று கூறுகிறார்கள். சிஎஸ்கே கேப்டன் தோனியும் ஜாதவை பிளேயிங் 11ல் இருந்து நீக்க முடிவு செய்துள்ளார். இவருக்கு பதிலாக இரண்டு வீரர்களை சிஎஸ்கே மனதில் வைத்துள்ளது. முதல் வீரர் ரூதுராஜ் கெய்காவாட். இவருக்கு சிஎஸ்கே வாய்ப்பு வழங்கலாம்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இவர் சிஎஸ்கேவில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை. இதனால் ரூது ராஜ் இல்லையென்றால் பெரும்பாலும் என் ஜெகதீசன் சிஎஸ்கே சார்பாக விளையாட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். வலது கை பேட்ஸ்மேனான இவர் தமிழக அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியிலும், டிஎன்பிஎல் போட்டிகளிலும் ஆடி உள்ளார்.

எப்படி

எப்படி

இவர் டிஎன்பிஎல் போட்டிகளில் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார். திண்டுக்கல் அணிக்காக டிஎன்பிஎல் தொடரில் ஆடி கவனம் ஈர்த்தார். சிஎஸ்கே அணி மூலம் ஐபிஎல் தொடரில் சாதிக்க இவர் திட்டமிட்டு வருகிறார். இந்த நிலையில் இவரை நாளை தோனி அணியில் எடுக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Story first published: Friday, October 9, 2020, 18:38 [IST]
Other articles published on Oct 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+