For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நட்டியை பார்த்து நடுங்கிய ஜாம்பவான்கள்.. பும்ராவால் கூட முடியவில்லை.. அப்படி என்ன செய்தார் நடராஜன்?

சார்ஜா: 2020 ஐபிஎல் தொடரில் இதுவரை யாரும் செய்யாத சாதனை ஒன்று ஹைதராபாத் அணிக்காக ஆடி வரும் தமிழக வீரர் நடராஜன் செய்துள்ளார்.

மும்பைக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி தற்போது சார்ஜாவில் நடந்து வருகிறது. ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை டாஸ் வென்றது. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது.

இந்த மைதானம் பேட்டிங் செய்ய சாதகமான மைதானம் ஆகும். இதனால் தொடக்கத்தில் இருந்து இங்கு மும்பை மிகவும் அதிரடியாக ஆடியது.

எத்தனை அடித்தனர்

எத்தனை அடித்தனர்

தொடக்கத்தில் இருந்து மும்பை அணி அதிரடியாக ஆடியது. ரோஹித் சர்மா, சூர்யா குமார் யாதவ் இருவரும் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். ஆனால் டீ காக் இன்னொரு பக்கம் அதிரடியாக ஆடி 67 ரன்கள் எடுத்தார். அதேபோல் கடைசி நேரத்தில் வந்த பொல்லார்ட் மற்றும் குர்னால் பாண்டியா ஆகியோர் தலா 25 மற்றும் 20 ரன்கள் எடுத்தனர்.

பவுலர்கள்

பவுலர்கள்

20 ஓவரில் மொத்தம் மும்பை 208 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் பவுலர்கள் போட்ட அனைத்து பந்துகளையும் பேட்ஸ்மேன்கள் பறக்கவிட்டனர். ஆனால் இவர்களால் இரண்டு பேரின் பந்துகளை மட்டுமே தொட கூட முடியவில்லை. ஒருவர் உலகின் நம்பர் 1 ஸ்பின் பவுலர் ரஷீத் கான். இவர் 4 ஓவரில் 1 விக்கெட் எடுத்து வெறும் 22 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

இன்னொரு பக்கம்

இன்னொரு பக்கம்

அதேபோல் இன்னொரு பக்கம் ஹைதராபாத் அணியில் விளையாடும் தமிழக வீரர் நடராஜன் 4 ஓவரில் 29 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதிலும் தான் போட்ட முதல் ஓவரில் வெறும் 1 ரன் மட்டுமே கொடுத்தார். பும்ரா போன்ற வீரர்கள் கூட ஓவருக்கு 14-15 ரன்கள் கொடுத்தனர். ஆனால் நடராஜன் மாஸ் காட்டு காட்டி ரன்களை கட்டுப்படுத்தினர்.

யார்க்கர்

யார்க்கர்

இந்திய அணியின் யார்க்கர் நாயகன் என்ற பெயரை பும்ரா பெற்று இருந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த தொடரில் பும்ராவை விட மிக சிறப்பாக நடராஜன் யார்க்கர் போட்டு வருகிறார். இதுவரை போட்டிகளில் விளையாடி இருக்கும் நடராஜன் 21 யார்க்கர் போட்டுள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் வீரர் ஒருவர் போட்ட அதிகபட்ச யார்க்கர் இதுதான்.

இல்லை

இல்லை

பும்ரா, ராபாடா கூட இவ்வளவு யார்க்கர் போடவில்லை. அதிக விக்கெட் எடுத்த ஷமி கூட யார்க்கர் வீசவில்லை. ஆனால் நடராஜன் மிக சாதாரணமாக 145+ கிமீ வேகத்தில் காலிலேயே பந்தை சொருகி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்துள்ளார். இவரின் பவுலிங்கை இரண்டாவது போட்டியிலேயே ஜாம்பவான் பிரிட்லீ பாராட்டினார். அப்போது உலகம் முழுக்க இவர் கவனம் பெற்றார்.

தேசிய டிரெண்ட்

தேசிய டிரெண்ட்

இவர் டெல்லிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 6 யார்க்கர் பந்துகளை வீசினார். ஐபிஎல்லில் மலிங்கா கூட இந்த சாதனையை செய்தது இல்லை.இன்றைய போட்டி மூலம் தற்போது நடராஜன் தேசிய அளவில் வைரலாகி வருகிறார். 21 யார்க்கர் போட்ட இவரை கிரிக்கெட் ஜாம்பவான்கள் எல்லாம் பாராட்டி வருகிறார்கள்.

Story first published: Sunday, October 4, 2020, 19:01 [IST]
Other articles published on Oct 4, 2020
English summary
IPL 2020: Natarajan bowling gets applause after he bowled 21 yorkers so far in this season.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+