For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 வீரர்களாலும் முடியாது.. கனவை நெருங்கும் நடராஜன்.. முக்கிய லிஸ்டில் சின்னப்பம்பட்டி யார்க்கர் கிங்?

துபாய்: ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கை கூடி வர உள்ளது. எல்லாம் நன்றாக சென்றால்..அவரால் தனது கனவை நிறைவேற்ற முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

2020 ஐபிஎல் தொடர் பல திறமைகளை கிரிக்கெட் உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது. வெளிநாட்டு வீரர்கள் பெரிய அளவில் இந்த சீசனில் விளையாடாத நிலையில் முழுக்க முழுக்க உள்ளூர் வீரர்கள்தான் சிறப்பாக கலக்கி வருகிறார்கள்.

அதிலும் தமிழக வீரர் நடராஜன், தேவ்தத் படிக்கல், ரியான் பராக், நவ்தீப் சைனி, வாஷிங்க்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ராகுல் திவாதியா என்று உள்ளூர் வீரர்கள்தான் இந்த சீசனில் சிறப்பாக கலக்கி வருகிறார்கள்.

கலக்கல்

கலக்கல்

அதிலும் தமிழக வீரர் நடராஜன் பெரிய அளவில் நம்பிக்கை அளித்துள்ளார். பிரட்லீ போன்ற ஜாம்பவான் வீரர்கள் பாராட்டும் அளவிற்கு நடராஜன் பந்து வீசி வருகிறார். டெத் ஓவர்களில் யார்க்கர் வீசுவது , முக்கியமான கட்டத்தில் ஸ்லோ பால் புல் டாஸ் போட்டு விக்கெட் எடுப்பது என்று நடராஜன் கலக்கி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ரன் செல்வதை கட்டுப்படுத்தி நடராஜன் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கும் காரணமாக இருக்கிறார்.

வெற்றி

வெற்றி

ஹைதராபாத் அணியில் இருந்து புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக வெளியேறி உள்ளார். இதனால் அங்கு பவுலிங் பொறுப்பு முழுக்க கலீல் அஹமது மற்றும் நடராஜன் மீதுதான் விழுந்துள்ளது. புவனேஷ்வர்குமார் இல்லை என்றாலும் கூட ஸ்பீட் பவுலிங்கில், முக்கியமாக டெத் ஓவர்களில் நடராஜன் மிக சிறப்பாக பந்து வீசி வருகிறார். அணியின் கேப்டன் வார்னர், கீப்பர் பிரைஸ்டோ, கேன் வில்லியம்சன் என்று பலரும் நடராஜன் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

இந்த நிலையில்தான் நடராஜனுக்கு மிக முக்கியமான வாய்ப்பு ஒன்று கை கூடி வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் அவர் கலக்கி வரும் நிலையில் இந்திய அணியில் அவர் இணைய வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது. தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா இரண்டு பேருமே காயம் காரணமாக வெளியேறிவிட்டனர். இவர்கள் அடுத்த டிசம்பர் மாதம் நடக்க உள்ள ஆஸ்திரேலிய தொடரிலும் விளையாட வாய்ப்பு இல்லை.

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. இந்த போட்டிகளில் ஆட இந்திய வீரர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள். ஷமி, பும்ரா ஆகிய இரண்டு ஸ்பீட் பவுலர்கள் உறுதியாக விளையாட வாய்ப்புள்ள நிலையில்.. இன்னும் ஸ்பீட் இரண்டு பவுலர்கள் கூடுதலாக தேர்வு செய்யப்பட வேண்டும். அந்த இரண்டு பேர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது .

யார் எல்லாம்

யார் எல்லாம்

டெஸ்ட், ஒருநாள் போட்டுகள் நடப்பதால் நான்கு ஸ்பீட் பவுலர்களை இந்திய அணி தேர்வு செய்யும். இதில் புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா இல்லாததால் நடராஜன், நவ்தீப் சைனி, கலீல் அஹமது மூன்று பேருக்கும் இடையில் போட்டி ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூவரில் இரண்டு பேர் அணியில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் பெரும்பாலும் நவ்தீப் சைனி அணிக்குள் வர பெரிய அளவில் வாய்ப்பு உள்ளது.

ஆனால் நடராஜன்

ஆனால் நடராஜன்

அதே சமயம் கலீல் அஹமது இதற்கு முன் இந்திய அணிக்கு தேர்வான சமயங்களில் சரியாக பந்து வீசவில்லை. அதேபோல் வெளிநாட்டு பிட்ச்களில் இவர் சரியாக பந்து வீசுவது இல்லை. அதனால் யார்க்கர் கிங்.. நடராஜனை இந்திய அணி தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ரோஹித், கோலியுடன் நடராஜன் நட்பாக இருப்பதாலும் பெரும்பாலும் நடராஜனுக்கு இந்திய அணியில் இணைய வாய்ப்பு வரும் என்று கூறுகிறார்கள்... நவம்பர் இரண்டாம் வாரம் அணிகள் அறிவிக்கப்படும் என்பதால்.. அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Thursday, October 15, 2020, 16:49 [IST]
Other articles published on Oct 15, 2020
English summary
IPL 2020: Natarajan has a huge chance of playing team India as Bhuvi, Ishant ruled out for Aussie trip.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+