Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யார் பேச்சையும் கேட்பதில்லை.. டீமை காலி செய்துவிட்டார்.. தவிக்கும் ராகுல்.. கும்ப்ளே நீக்கப்படுவாரா?

துபாய்: பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ப்ளேவை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

2020 ஐபிஎல் தொடரில் மிக மோசமான அணியாக பஞ்சாப் அணி உருவெடுத்துள்ளது. அணியில் நல்ல தொடக்க வீரர்கள், பேட்டிங் ஆர்டர் இருந்தும் கூட பஞ்சாப் அணி தொடர்ச்சியாக தோல்விகளை தழுவி வருகிறது.

வெற்றிபெற வாய்ப்பு இருக்கும் போட்டிகளில் கூட பஞ்சாப் அணி தோல்வி அடைவது பெரிய அளவில் கேள்விகளை எழுப்பி உள்ளது. அதிலும் கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் தோல்வி அடைந்தது மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

என்ன தவறு

என்ன தவறு

பஞ்சாப் அணியின் தொடர் தோல்விகளுக்கு கேப்டன் கே. எல் ராகுல் காரணம் என்று புகார் வைக்கப்படுகிறது. மேம்போக்காக பார்த்தால் அணியின் கேப்டன்சியில் நிறைய தவறு இருப்பது போல தோன்றும். தவறான பவுலிங் ரொட்டேஷன், பேட்டிங் ஆர்டர் என்று கே . எல் ராகுல் மீது நிறைய குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. அதோடு இவர் அணியில் இருக்கும் வீரர்களை கட்டுப்படுத்துவது இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் உண்மையில் பஞ்சாப் அணியின் தோல்விக்கு கே. எல் ராகுல் காரணம் இல்லை அணியின் பயிற்சியாளர் கும்ப்ளேதான் காரணம் என்று புகார்கள் வைக்கப்படுகிறது. ஆம் அணியில் அனைத்து முடிவுகளையும் கும்ப்ளேதான் எடுக்கிறார். முக்கியமாக பவுலிங் ரொட்டேஷன் தொடங்கி பேட்டிங் ஆர்டர், அணி தேர்வு வரை அனைத்து முடிவுகளையும் கும்ப்ளேதான் எடுக்கிறார்.

பெயருக்கு கேப்டன்

பெயருக்கு கேப்டன்

கே.எல் ராகுல் பெயருக்கு மட்டுமே கேப்டனாக இருக்கிறார். அவரை கும்ப்ளேதான் முழுக்க முழுக்க கட்டுப்படுத்துகிறார் என்று புகார்கள் வைக்கப்படுகிறது. இதனால்தான் பஞ்சாப் அணி தொடர் தோல்விகளை சந்திக்கிறது. பஞ்சாப் அணியில் கேப்டனுக்கு போதிய சுதந்திரம் இல்லை. அதனால்தான் அவரால் முக்கியமான நேரங்களில் முடிவுகளை எடுக்க முடியவில்லை என்று புகார்கள் வைக்கப்படுகிறது.

கும்ப்ளே

கும்ப்ளே

அதிலும் கும்ப்ளே மொத்தமாக பஞ்சாப் அணியை காலி செய்துவிட்டார். அவர் யார் சொல்வதையும் கேட்பது இல்லை என்றும் புகார்கள் வைக்கப்படுகிறது. அணி நிர்வாகம் சொல்லும் பேச்சை கூட கும்ப்ளே இப்போதெல்லாம்கே கேட்பது இல்லை. பஞ்சாப் அணியில் நீக்க வேண்டியது கேப்டனை கிடையாது, பயிற்சியாளரைதான்.

மோசம்

மோசம்

அவர்தான் அணியை மிக மோசமாக் வழி நடத்துகிறார் என்று புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது.. முக்கியமாக இணையத்தில் ரசிகர்கள் பலர் இந்த கோரிக்கையை வைக்க தொடங்கி உள்ளனர். இந்த தொடருக்கு பின் இதனால் பஞ்சாப் அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள்.

Story first published: Sunday, October 11, 2020, 15:31 [IST]
Other articles published on Oct 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+