யார் அந்த முடிவை எடுத்தது? கொஞ்சம் பிட்சை பாருங்கள் தோனி.. சிஎஸ்கே செய்த பெரிய தவறு.. சிக்கல்!
துபாய்: இன்று அபுதாபியில் நடக்கும் போட்டியில் இம்ரான் தாஹிரை சிஎஸ்கே அணி ஆடும் லெவனில் எடுக்காதது பெரிய சர்ச்சையாகி உள்ளது.
ராஜஸ்தானுக்கு சென்னைக்கும் இடையே இன்று அபுதாபியில் ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சிஎஸ்கே கடுமையாக சொதப்பி உள்ளது.
20 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் சிஎஸ்கே அணி வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. சிஎஸ்கே சார்பாக ஜடேஜா மட்டுமே 35 ரன்கள் எடுத்துள்ளார்.

எப்படி
இன்றைய மேட்ச் அபுதாபியில் நடக்கிறது. இந்த பிட்ச் முழுக்க முழுக்க ஸ்பின் பிட்ச் ஆகும். இங்கு எளிதாக லெக் ஸ்பின் பவுலிங் எடுபடும். இதனால்தான் இன்று ராஜஸ்தான் அணி ஸ்பீட் பவுலிங் மீது கவனம் செலுத்தாமல் இன்று ஸ்பின் பவுலிங் மீது கவனம் செலுத்தி அதற்கு ஏற்றபடி பவுலர்களை களமிறங்கியது.

ராஜஸ்தான்
முக்கியமாக ராஜஸ்தான் அணியின் லெக் ஸ்பின் பவுலர்கள் ராகுல் திவாதியா, ஷ்ரேயாஸ் கோபால் இருவரும் சிறப்பாக பந்து வீசினார்கள். இரண்டு பேருமே லெக் ஸ்பின்னர்கள். இவர்கள் இருவரும் இன்று போட்ட கூக்ளி பந்துகள்தான் மொத்தமாக ஆட்டத்தை கட்டுப்படுத்தியது.

ஷ்ரேயாஸ் கோபால்
இன்று ஷ்ரேயாஸ் கோபால் வீசிய 4 ஓவரில் வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இவரின் ஓவரில் ஒரு சிக்ஸ் கூட செல்லவில்லை. அதன்பின் ராகுல் திவாதியா போட்ட 4 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இரண்டு பேருமே ஒவ்வொரு விக்கெட்டுகளை எடுத்தனர். இரண்டு விக்கெட்டுமே கூக்ளி பந்துகளில் எடுக்கப்பட்ட விக்கெட் ஆகும்.

ஆனால்
ஆனால் இதே பிட்சில் களமிறங்குகிறோம் என்று தெரிந்தும் கூட தோனி இன்று இம்ரான் தாஹிரை களமிறக்கவில்லை. இன்று அணியில் பிராவோ இல்லை. இதனால் இம்ரான் தாஹிரை இறக்க வசதியாக சூழ்நிலை உருவானது. அதிலும் தாஹிர் லெக் ஸ்பின்னர். ஆனால் சூழ்நிலை இருந்தும் கூட தோனி இன்று தாஹிரை இறக்கவில்லை.

மோசம்
மாறாக ஹஸல்வுட்டை இன்று தோனி தேர்வு செய்துள்ளார். இந்த பிட்சில் தோனி இம்ரான் தாஹிரை இறக்கவில்லை என்றால் எங்கு களமிறக்குவார். எங்கு பவுலிங் போட வைப்பார். ஒரு ஸ்லோ பிட்ச்சில் தாஹிரை கொண்டு வரவில்லை என்றால் எங்குதான் தோனி அவரை பயன்படுத்துவார் என்று கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications