For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன இவருக்கும் எதிர்காலம் காலியா? முறையாக குறி வைக்கும் கங்குலி.. இளம் வீரர் மீது திரும்பும் போகஸ்!

துபாய்: இந்திய அணியில் ஓப்பனிங் வீரர் தவான் மாற்றப்படுகிறாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது. கங்குலி அளித்த பேட்டி ஒன்று இந்த சந்தேகத்தை வலுவாக்கி உள்ளது.

2020 ஐபிஎல் தொடர் பல இளம் வீரர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ரவி பிஸ்னோய், வருண் சக்ரவர்த்தி, டி நடராஜன், படிக்கல் என்று பல இளம் வீரர்கள் இந்த தொடரில் கலக்கி வருகிறார்கள்.

அதிலும் பெங்களூர் அணியின் ஓப்பனிங் வீரர் தேவ்தத் படிக்கல் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். இந்த சீசன் முழுக்க பெங்களூர் அணிக்காக படிக்கல் மிகவும் சிறப்பாக ஓப்பனிங் செய்து உள்ளார்.

என்ன

என்ன

இந்த நிலையில் இந்திய அணியில் படிக்கலுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியின் ஓப்பனிங் வீரராக களமிறங்க படிக்கலுக்கு வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் தவான் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறலாம். அவர் இப்போது நல்ல பார்மில் இருக்கிறார்.

ஆனால் வயது

ஆனால் வயது

ஆனால வயோதிகம் காரணமாக தவான் இரண்டு வருடங்களில் ஓய்வு பெறலாம். அதற்கு பின் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் களமிறங்க புதிய ஓப்பனிங் வீரரை தேட வேண்டும். ரோஹித் சர்மாவுடன் ஓப்பனிங் இறங்கும் வீரரை தேர்வு செய்ய வேண்டும். இதில் படிக்கல் தேர்வாக வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.

கங்குலி

கங்குலி

இதற்கு பதில் அளித்துள்ள கங்குலி படிக்கல் மிகவும் திறமையான வீரர். தனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்க காலத்தில் அவர் இருக்கிறார். ரஞ்சி கோப்பை போட்டியில் அவரை பார்த்து இருக்கிறேன். அவர் நன்றாக ஆடினார்.

சில சீசன்

சில சீசன்

அவர் இன்னும் சில சீஸன்கள் ஆட வேண்டும். அடுத்த சீசன் இன்னும் கஷ்டமாக இருக்கும். இந்தியாவிற்கு வலிமையான ஒப்பனர்கள் தேவை. படிக்கலுக்கு தகுந்த வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும். அவர் தொடர்ந்து ஆட வேண்டும்,என்று கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி

கேள்வி

கங்குலியின் இந்த பேட்டி பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்திய அணிக்கு வலிமையான ஒப்பனர்கள் தேவை என்று அவர் கூறியுள்ளார் . அதோடு படிக்கல்லையும் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். இதனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வரும் வருடங்களில் படிக்கலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு.. தவான் புறக்கணிக்கப்படுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Sunday, November 8, 2020, 13:28 [IST]
Other articles published on Nov 8, 2020
English summary
IPL 2020: Padikkal Has to replace Dhawan in Team India in future
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+