கொஞ்சமும் சரியில்லை.. இதுபோல நடக்கவே கூடாது.. தோனிக்காக அதிரடியாக களமிறங்கிய அப்ரிடி..என்ன சொன்னார்?
துபாய்: சிஎஸ்கே கேப்டன் தோனியின் குடும்பத்திற்கு எதிராக வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்கள், பாலியல் மிரட்டல்களுக்கு கிரிக்கெட் உலகில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகிப் அப்ரிடி தோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி காரணமாக கேப்டன் தோனியின் குடும்பத்தினரை இணையத்தில் சில விஷமிகள் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். சிஎஸ்கேவின் தோல்விக்கு தோனிதான் காரணம். அவர் வீட்டில் இருந்து பார்ம் அவுட் ஆகிவிட்டார் என்று விமர்சனம் செய்துள்ளனர்.
இன்னும் சிலர் தோனியின் மனைவி சாக்சியை பற்றி தவறாக பேசி உள்ளனர்.மேலும் சிலர் தோனியின் மகள் ஸிவா குறித்தும் தவறாக பேசி உள்ளனர்.

ஸிவா
ஸிவாவிற்கு பாலியல் ரீதியாக சிலர் மிரட்டல்களை டிவிட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் விடுத்துள்ளனர். இணையம் முழுக்க இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. சிஎஸ்கேவின் தொடர் தோல்விகளை பொறுக்க முடியாமல் ஒரு சிலர் இணையத்தில் ஸிவாவிற்கு இப்படி பாலியல் ரீதியான மிரட்டல்களை விடுத்துள்ளனர்.

கருத்து
இந்த நிலையில் தோனியின் குடும்பத்திற்கு எதிராக வைக்கப்பட்ட இந்த கடுமையான விமர்சனங்கள், பாலியல் மிரட்டல்களுக்கு கிரிக்கெட் உலகில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் உலகை சேர்ந்த பலர் இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியும் தோனிக்கு ஆதரவாக தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

என்ன சொன்னார்
ஷாகித் அப்ரிடி தனது கருத்தில், இது கொஞ்சம் கூட சரியில்லை. இது போன்ற விஷயங்கள் நடக்கவே கூடாது. தோனியின் குடும்பத்திற்கு எதிராக என்ன மாதிரியான மிரட்டல்கள் கொடுக்கப்பட்டது என்று எனக்கு தெரியாது. ஆனால் இது முழுக்க முழுக்க தவறு. இப்படிப்பட்ட விஷயங்களை அனுமதிக்க கூடாது.

தோனி
இந்திய கிரிக்கெட்டை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றவர்தான் தோனி . அப்படிப்பட்ட நபருக்கு எதிராக பேசுவது தவறு. சீனியர்கள், ஜூனியர்கள் என்று முக்கிய வீரர்களை ஒருங்கிணைத்து.. அவர் மிக சிறப்பாக இந்திய அணியை வழி நடத்தினார். அப்படிப்பட்ட வீரரை தவறாக நடத்த கூடாது, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அப்ரிடி கூறியுள்ளார்.

கைது
இந்த நிலையில் தோனியின் குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். தோனியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தது உண்மைதான் என்று 12 வது படிக்கும் இந்த சிறுவன்ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது இந்த சிறுவன் ராஞ்சி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications