Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

15.5 கோடி.. எல்லாமே வேஸ்ட்.. கொல்கத்தா தோல்விக்கு முக்கிய காரணம் இவர்தான்!

அபுதாபி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் மோசமாக தோல்வி அடைந்தது.

இந்த தோல்விக்கு காரணம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மொத்தமாக பல விஷயங்களில் சொதப்பியது தான். ஆனாலும், ரசிகர்கள் குறிப்பிட்ட ஒரு வீரரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

கொல்கத்தா அணி 2020 ஐபிஎல் ஏலத்தில் பாட் கம்மின்ஸ்-ஐ 15.5 கோடி கொடுத்து வாங்கியது. அந்த ஏலத்தில் ஒரு வீரருக்கு கொடுக்கப்பட்ட மிகப் பெரிய தொகை அதுதான். அத்தனை பெரிய தொகை கொடுத்து வாங்கியும் பாட் கம்மின்ஸ் மோசமாக செயல்பட்டுள்ளதால் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தப் போட்டியில் ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே பாட் கம்மின்ஸ் ஆறுதல் அளித்தார்.

டாஸ்

டாஸ்

2020 ஐபிஎல் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

மும்பை அதிரடி

மும்பை அதிரடி

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டம் ஆடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மிரள வைத்தனர். 4 ஓவர்கள் பார்த்த தினேஷ் கார்த்திக் அதன் பின் குழப்பத்தில் வரிசையாக 4 பந்துவீச்சாளர்களை ஒவ்வொரு ஓவராக வீச வைத்தார்.

பாட் கம்மின்ஸ் சொதப்பல்

பாட் கம்மின்ஸ் சொதப்பல்

பாட் கம்மின்ஸ் 5வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் ரோஹித் சர்மா சர்வ சாதாரணமாக இரண்டு சிக்ஸ் அடித்தார். இதன் மூலம் பாட் கம்மின்ஸ் அந்த ஓவரில் 15 ரன்கள் கொடுத்தார். முன்பை விட மும்பை இந்தியன்ஸ் ரன் ரேட் எகிறியது.

இரண்டாவது முயற்சியும் வீண்

இரண்டாவது முயற்சியும் வீண்

இதை அடுத்து பாட் கம்மின்ஸ்க்கு 15 ஓவரரில் தான் பந்து வீச வாய்ப்பு அளித்தார். கடைசி நேரத்தில் ரன்களை கட்டுப்படுத்துவார் என நினைத்த ரசிகர்கள், பாட் கம்மின்ஸ் ஓவரில் மீண்டும் 15 ரன்கள் கொடுக்கப்பட்டதை கண்டு அதிர்ந்தனர். அடுத்து 17வது ஓவரில் இன்னும் மோசமாக 19 ரன்கள் கொடுத்தார்.

கொல்கத்தா தோல்வி

கொல்கத்தா தோல்வி

மும்பை இந்தியன்ஸ் அணி 195 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை சேஸ் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 146 ரன்கள் மட்டுமே எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது. அணியில் உலகத்தரமான, சிறந்த வீரர்கள் இருந்தும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வி அடைந்தது.

காரணம் இவர் தான்

காரணம் இவர் தான்

போட்டியின் முடிவில் 3 ஓவர்களில் 49 ரன்கள் கொடுத்த பாட் கம்மின்ஸ் மீது தான் ரசிகர்களின் கோபம் சென்றது. கொல்கத்தாவின் தோல்விக்கு காரணமே அவர் தான் என்ற விமர்சனம் எழுந்தது. அவர் மீது அதிக கோபம் கிளம்ப மற்றொரு காரணமும் உள்ளது.

15.5 கோடி

15.5 கோடி

2020 ஐபிஎல் ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் பாட் கம்மின்ஸ். டெஸ்ட் போட்டி வீரராக அறியப்படும் பாட் கம்மின்ஸ் டி20யில் நல்ல ரெக்கார்டு வைத்துள்ளார். ஆனால், அவருக்கு 15.5 கோடி அதிகம் என அப்போதே பேசப்பட்டது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

அவ்வளவு தொகை கொடுத்து வாங்கிய வீரர் என்பதால் அவரது செயல்பாடு மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதை அவர் நிறைவேற்றவில்லை. அதிலும் அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அவர் அமைந்ததால் அவர் மீது கோபத்தில் பொங்கினர்.

கம்மின்ஸ் ஆறுதல்

கம்மின்ஸ் ஆறுதல்

இந்தப் போட்டியில் பாட் கம்மின்ஸ் ஒரு விஷயத்தில் ஆறுதல் அளித்துள்ளார். பேட்டிங் செய்ய வந்த போது அவர் 12 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார். 1 ஃபோர், 4 சிக்ஸ் அடித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 275 ஆக இருந்தது. ஆனால், அவர் ரன் அடித்த போது இலக்கு எட்ட முடியாத நிலையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, September 24, 2020, 12:25 [IST]
Other articles published on Sep 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+