Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பொறுத்திருந்து பாருங்கள்.. சிஎஸ்கே இறக்க போகும் புதிய பிளேயிங் லெவன்.. யார் உள்ளே? யார் வெளியே?

துபாய்: சிஎஸ்கே அணி அடுத்த ஐபிஎல் போட்டியில் அதிரடியான பிளேயிங் லெவன் அணியுடன் விளையாடும் என்று கூறுகிறார்கள்.இதற்கான அணியை தோனி இப்போதே தயார் செய்துவிட்டார் என்கிறார்கள்.

ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த முறை சிஎஸ்கே விளையாடும் போட்டிகளை தவிர மற்ற அனைத்து போட்டிகளும் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

சிஎஸ்கே மும்பை மோதிய முதல் ஐபிஎல் போட்டி மட்டுமே கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்தது. அதன்பின் சிஎஸ்கே ஆடிய இரண்டு போட்டிகளும் மிகவும் மெதுவாக சென்றது. இந்த போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே மாற்றம்

சிஎஸ்கே மாற்றம்

இந்த போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி அடைய மூன்று முக்கியமான காரணங்கள் சொல்லப்பட்டது.

  • சென்னை அணியின் ஓப்பனிங் வீரர்கள் சரியாக ஆடுவது இல்லை.
  • சென்னை அணியின் ஸ்பின் பவுலிங் சரியாக இல்லை.
  • சென்னை அணியின் டெத் ஓவர் சரியாக இல்லை என்று புகார் வைக்கப்பட்டது.
கோபம் ஏன்

கோபம் ஏன்

முக்கியமாக சென்னை அணியின் தொடக்க வீரர்கள் மிக மோசமாக ஆடினார்கள். முரளி விஜய் சரியான தொடக்கம் கொடுக்கவில்லை என்று தோனியே பேட்டியில் தெரிவித்தார். சிஎஸ்கேவின் தொடக்க வீரர்கள் யாரும் பெரிய அளவில் வேகம் கொடுக்கவில்லை, அதிரடியாக போட்டியை தொடங்கவில்லை என்று தோனி பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

நீக்கம்

நீக்கம்

இதனால் கண்டிப்பாக சென்னை அணி விளையாடும் அடுத்த போட்டியில் முரளி விஜய் விளையாட வாய்ப்பே இல்லை என்கிறார்கள். அதேபோல் அடுத்த போட்டியில் அம்பதி ராயுடு திரும்பி வருவார். இவரின் காயம் சரியாகிவிட்டது. இதனால் அம்பதி ராயுடு மீண்டும் அணிக்கு வருவார் என்பது உறுதியாகி உள்ளது.

பிராவோ

பிராவோ

இன்னொரு பக்கம் பிராவோவும் காயத்தில் இருந்து குணமடைந்து உள்ளார். இவரின் டெத் பவுலிங்கை சென்னை அணி பெரிய அளவில் மிஸ் செய்கிறது. இவருக்கு பதிலாக களமிங்கிய லுங்கியும் சரியாக பவுலிங் செய்யவில்லை, கடந்த போட்டியில் ஜோஸ் ஹசல்வுட்டும் கடைசி ஓவரில் பவுண்டரிகளை வாரி வழங்கினார் .

அடுத்த போட்டியில் பிராவோ

அடுத்த போட்டியில் பிராவோ

இதனால் அடுத்த போட்டியில் கண்டிப்பாக பிராவோ இடம் பெறுவார் என்கிறார்கள். சென்னை அணியில் இருந்து முரளி விஜய், ஜோஸ் ஹசல்வுட் இருவரும் நீக்கப்பட வாய்ப்புள்ளது. மாறாக பிராவோ மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் அணியில் இணைய வாய்ப்புள்ளது.

வாய்ப்பு என்ன

வாய்ப்பு என்ன

இதனால் வரும் வெள்ளிக்கிழமை ஹைதராபாத்திற்கு எதிராக விளையாடும் சென்னை அணியின் உத்தேச பிளெயிங் லெவன் விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ராயுடு, வாட்சன் ஓப்பனிங் இறங்குவார்கள். அவரை தொடர்ந்து டு பிளசிஸ், ரூத்துராஜ், இறங்குவார்கள்.

வேறு யார்

வேறு யார்

அதன்பின் தோனி, சாம் கரன், ஜடேஜா, கேதார் ஜாதவ், பிராவோ இறங்குவார்கள். பின் பியூஸ் சாவ்லா, சாகர் இறங்குவார்கள் என்று தகவல்கள் வருகிறது. கடைசி நேரத்தில் கேதார் ஜாதவிற்கு பதில் கே.எம் ஆசிப் போன்ற இந்திய வீரர் அணிக்குள் சர்ப்ரைஸாக வரவும் வாய்ப்புள்ளது.

Story first published: Monday, September 28, 2020, 19:01 [IST]
Other articles published on Sep 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+