Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கும்ப்ளேவிற்கு செக்.. ஹார்ட் அட்டாக் வர வைக்காதீர்கள்.. சொந்த டீமையே கழுவி ஊற்றிய பிரீத்தி ஜிந்தா!

துபாய்: நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது. பஞ்சாப் அணியின் வெற்றி குறித்து பிரீத்தி ஜிந்தா கருத்து தெரிவித்துள்ளார்.

2020 ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது. இதனால் பஞ்சாப் அணி பிளே ஆப் செல்வதே ஏறத்தாழ கனவு என்ற நிலை உருவானது. இந்த நிலையில்தான் நாங்க இருக்கும் போது நீங்க ஏன் கவலைப்படுறீங்க என்று பெங்களூர் அணி தானாக வந்து பஞ்சாப்பிடம் நேற்று தலையை கொடுத்தது.

வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருந்தும் கெயில் நிகழ்த்திய அதிரடி காரணமாக பெங்களூர் தோல்வி அடைந்தது. இதனால் பஞ்சாப் எளிதாக இரண்டு புள்ளிகள் பெற்றது.

பெங்களூர்

பெங்களூர்

நேற்று முதலில் களமிறங்கிய பெங்களூர் 20 ஓவருக்கு 171 ரன்கள் எடுத்தது. அதன்பின் பேட்டிங் செய்த பஞ்சாப் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து 177 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. நேற்று பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி அணியை எளிதாக வெற்றிபெற வைத்தனர்.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

16 ஓவர் முடிந்த போதே நேற்று பஞ்சாப் கிட்டத்தட்ட வெற்றி இலக்கை நெருங்கிவிட்டது. 16 ஓவர் முடிவில் பஞ்சாப் 146 ரன்கள் எடுத்து இருந்தது. 4 ஓவரில் 26 ரன்கள் எடுத்தால் வெற்றி. பஞ்சாப் நினைத்து இருந்தால் 18 ஓவரில் போட்டியை முடித்து இருக்க முடியும். அதற்கு அடுத்த ஓவரிலும் 15 ரன்கள் சென்றது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் 18வது ஓவரில் ஆட்டம் தலைகீழாக மாறியது. மோரியஸ் போட்ட அந்த ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே சென்றது. அதற்கு அடுத்து உடானா போட்ட 19 ஓவரில் 5 ரன்கள் மட்டுமே சென்றது. இதனால் பஞ்சாப் வசம் இருந்த மேட்ச் பெங்களூர் பக்கம் திரும்பியது. கடைசி ஓவரில் 2 ரன் அடிக்க வேண்டும் என்று நிலை இருந்தது.

நிலைமை என்ன

நிலைமை என்ன

அந்த கடைசி ஓவரை சாஹல் வீச வந்தார். அந்த ஓவரின் முதல் இரண்டு பந்தில் ரன் எதுவும் செல்லவில்லை. மூன்றாவது பந்தில் ஒரு ரன் சென்றது. 4வது பந்தில் எந்த ரன்னும் செல்லாத நிலையில் 5வது பந்தில் கெயில் ரன் அவுட்டானார். இதனால் கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் பஞ்சாப் வீரர் பூரான் சிக்ஸ் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார்.

பஞ்சாப் வெற்றி

பஞ்சாப் வெற்றி

பஞ்சாப் அணிக்கு எளிதாக வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் தேவையில்லாமல் கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்து சென்று கடைசி பந்தில் பஞ்சாப் வென்றது. பஞ்சாப் அணியின் ஆட்டத்தை தற்போது அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவே கிண்டல் செய்துள்ளார். அணி கடைசி ஓவர் வரை போட்டியை கொண்டு சென்றதை பிரீத்தி ஜிந்தா கிண்டல் செய்துள்ளார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

அதில், கடைசியாக தேவைப்பட கூடிய ஒரு வெற்றியை பெற்று இருக்கிறோம். கிரிக்கெட் என்ற பெயரில் மக்களுக்கு நமது அணி ஹார்ட் அட்டாக் கொடுக்க கூடாது. பஞ்சாப் அணி விளையாடும் போட்டிகளை இதயம் பலகீனமானவர்கள் பார்க்க கூடாது. ஆர்சிபி பவுலர்கள் கடைசி நேரத்தில் ஆட்டத்தை மாற்றி போராடியதை பாராட்டுகிறேன், என்று பிரீத்தி ஜிந்தா குறிப்பிட்டுள்ளார்.

கும்ப்ளே

கும்ப்ளே

இன்னொரு பக்கம் பிரீத்தி ஜிந்தா கும்ப்ளே மீதும் அணியின் கேப்டன் ராகுல் மீதும் அதிருப்தியில் இருப்பதாக கூறுகிறார்கள். அதன்படி முருகன் அஸ்வின், கெயில் போன்ற வீரர்களை வைத்துக்கொண்டு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் கும்ப்ளே எடுத்த முடிவுகள்தான் அணியின் தொடர் தோல்விக்கு காரணம் என்று பிரீத்தி ஜிந்தா அதிருப்தியில் இருக்கிறார்.

ஏன் உட்கார வைத்தார்

ஏன் உட்கார வைத்தார்

அணியில் நன்றாக ஆடும் முருகன் அஸ்வினுக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. நேற்று போட்டியில் ஆடிய முருகன் அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். அதேபோல் அணியில் இதுநாள் வரை கெயிலுக்கு வாய்ப்பு கொடுக்காமல் மேக்ஸ்வெல் மற்றும் கர்நாடக வீரர்களுக்கு கும்ப்ளே வாய்ப்பு கொடுத்தார். இப்படி கும்ப்ளே தவறாக எடுத்த முடிவுகள்தான் பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

Story first published: Friday, October 16, 2020, 13:52 [IST]
Other articles published on Oct 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+