Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓவர் திமிர்.. தேவையில்லாத பில்டப்.. ஏமாற்றம் தந்த இளம் வீரர்.. ஆக்சனுக்கு ரெடியான அணி நிர்வாகம்!

டெல்லி: டெல்லி அணியில் ஓப்பனிங் வீரராக ஆடி வரும் பிரித்வி ஷா தொடர்ந்து மோசமாக சொதப்பி வருகிறார்.

2020 ஐபிஎல் தொடரில் டெல்லி அணி தத்தித்தாவி ஒரு வழியாக பிளே ஆப் சென்றுள்ளது. தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய டெல்லி அணி போக போக மோசமாக சொதப்பியது.

நேற்று நடந்த வாழ்வா சாவா ஆட்டத்தில் கஷ்டப்பட்டு ஆடிய டெல்லி அணி பெங்களூரை வீழ்த்தி பிளே ஆப் சென்றுள்ளது. ஆனால் டெல்லி அணியில் இருக்கும் பல வீரர்கள் இன்னும் முழுமையாக பார்மிற்கு திரும்பவில்லை.

ஏன்

ஏன்

முக்கியமாக டெல்லி அணியில் ஓப்பனிங் வீரராக ஆடி வரும் பிரித்வி ஷா தொடர்ந்து மோசமாக சொதப்பி வருகிறார். முக்கியமான கட்டத்தில் கூட டெல்லி அணிக்காக இவர் சரியாக பேட்டிங் செய்யவில்லை. வாய்ப்பு கிடைத்த போட்டியில் எல்லாம் மோசமாக பேட்டிங் செய்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி உள்ளார் .

மோசம்

மோசம்

இவர் மோசமாக ஆடுகிறார் என்று இடையில் இவருக்கு ஓய்வும் அளிக்கப்பட்டது. தனக்கு அளிக்கப்பட்ட ஓய்வு மூலம் இவர் பார்மிற்கு திரும்புவார். மீண்டும் சரியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் களத்திற்கு வந்த பின்பும் கூட இவர் சரியாக ஆடவில்லை.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

கடைசியாக நடந்த 6 போட்டிகளில் இவர் எடுத்த ரன்கள் 4,0,0,7, 10, 9 ஆகும். டெல்லி அணி கட்டாயமாக வெற்றிபெற வேண்டிய போட்டிகளில் கூட பிரித்வி ஷா இப்படித்தான் ஆடியுள்ளார். இதனால் பயிற்சியாளர் பாண்டிங்கும் இவர் மீது கோபமாக உள்ளார். முதல் தர போட்டிகளில் பிரித்வி ஷா ஆட்டத்தை பார்த்துவிட்டு, இவர்தான் அடுத்த சச்சின் என்று இவரை பலர் புகழ்ந்தனர்.

மூத்த வீரர்கள்

மூத்த வீரர்கள்

இதனால் இவர் களத்தில் திமிராக நடந்து கொண்டதாக புகார் வைக்கப்பட்டது. சக வீரர்கள் பலரை இவர் மிக மோசமாக நடத்தினார். திமிராக நடந்து கொள்கிறார் என்று புகார்கள் வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இவரின் ஆட்டமும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது.

சந்தேகம்

சந்தேகம்

டெல்லி அணியில் பொதுவாக வீரர்கள் நீண்ட காலம் இருக்க மாட்டார்கள். ஒரு சீசன் சரியாக ஆடவில்லை என்றால் அடுத்த சீசன் அவரை நீக்கிவிடுவார்கள். இதனால் ப்ரித்வி ஷா அடுத்த சீசனில் டெல்லி அணியில் ஆடுவது சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள்.

கோபம்

கோபம்

இவர் மீது அணி நிர்வாகம் கோபத்தில் உள்ளது. பல முறை வாய்ப்பு கொடுத்தும் இவர் சரியாக ஆடவில்லை. இதனால் ஷாவிற்கு பதில் அனுபவ வீரரை அடுத்த வருடம் எடுக்க டெல்லி அணி ஆலோசனை செய்து வருகிறது என்கிறார்கள்.

Story first published: Tuesday, November 3, 2020, 20:49 [IST]
Other articles published on Nov 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+