Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அங்கே தோனி துடிக்கிறார்.. இப்படியா செய்வீர்கள்? ரெய்னாவின் செயலால் ஆடிப்போன சிஎஸ்கே.. என்ன நடந்தது?

துபாய்: நேற்று நடந்த ஹைதராபாத் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்து ரெய்னா தெரிவித்த கருத்து ஒன்று பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று சிஎஸ்கே மற்றும் எஸ்ஆர்எச் அணிகளுக்கு இடையில் ஹைதராபாத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தொடக்கத்தில் சிஎஸ்கே ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலும் போக போக ஆட்டத்தை ஹைதராபாத் கட்டுக்குள் கொண்டு வந்தது.

நேற்று 20 ஓவரில் ஹைதராபாத் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய சென்னை 157 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

தோல்வி

தோல்வி

நேற்று சிஎஸ்கேவின் தோல்விக்கு மிக முக்கியமான காரணம் என்று பார்த்தால் அது ஹைதராபாத்தின் பிரியம் கார்க் என்ற வீரர்தான். 150 ரன்களில் நேற்று ஹைதராபாத்தை சிஎஸ்கே சுருட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரியம் கார்க் கடைசி நேரத்தில் சிஎஸ்கே பந்துகளை பறக்கவிட்டு போட்டியின் போக்கையே மாற்றினார். ஹைதராபாத் அணிக்காக மிடில் ஆர்டரில் இறங்கிய பிரியம் கார்க் 51 ரன்கள் எடுத்தார்.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

பிரியம் கார்க் வெறும் 26 பந்துகள் பிடித்து 6 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்தார். இன்னொரு பக்கம் அபிஷேக் சர்மா 24 பந்துகள் பிடித்து 31 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரி, 1 சிக்ஸ் அடக்கம். இதனால் ஹைதராபாத் 150க்குள் சுருண்டு விடும் என்று கருதப்பட்ட நிலையில் 164 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் இவரை நேற்று ரெய்னா பாராட்டி இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டு இருந்தார்.

போட்டோ எப்படி?

போட்டோ எப்படி?

அதில் பிரியம் கார்க் போட்டோவை போட்டு இதுதான் கார்க்கின் தொடக்கம் என்று குறிப்பிட்டு இருந்தார். பிரியம் கார்கின் ஆட்டத்தை பாராட்டும் வகையில் ரெய்னா இப்படி செய்து இருந்தார். இதை யாரும் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் நேற்று தோனியின் ஆட்டம் குறித்து ரெய்னா எதுவும் சொல்லவில்லை.

உயிரை கொடுத்தார்

உயிரை கொடுத்தார்

தோனி நேற்று உயிரை கொடுத்து ஆடினார். மைதானத்தில் மூச்சு கூட விட முடியாத சூழ்நிலையிலும் இரண்டு இரண்டு ரன்களாக ஓடினார். இடையில் அவருக்கு தொடர்ந்து இருமல் வந்தது. அப்போதும் கூட அவர் மைதானத்தில் சிஎஸ்கேவிற்காக போராடினார். ஆனால் அதை ரெய்னா பாராட்டவில்லை. மாறாக பிரியம் கார்க் இன்னிங்க்ஸை பாராட்டினார்.

கொதிப்பு

கொதிப்பு

இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் தற்போது கொதித்து போய் உள்ளனர். தோனியின் ஆட்டத்தை உங்களால் பாராட்ட முடியவில்லை. ஆனால் பிரியம் கார்க் ஆட்டத்தை பாராட்டுகிறீர்கள். தோனி அவ்வளவு கஷ்டப்பட்டு ஆடினார். ஏன் அதை பற்றி ஒரு டிவிட் கூட செய்யவில்லை என்று பலருக்கும் ரெய்னாவிற்கு எதிராக கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Story first published: Saturday, October 3, 2020, 12:04 [IST]
Other articles published on Oct 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+