Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் வேண்டவே வேண்டாம்.. உறுதியாக மறுக்கும் சிஎஸ்கே.. தோனி ரெய்னா இடையே அப்படி என்னதான் நடந்தது?

துபாய்: ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் சென்னை அணி தோல்வி அடைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் ரெய்னாவின் தேவை அதிகம் ஆகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் எப்போதும் தொடக்கத்தில் சென்னை அதிரடியாக ஆடி வெற்றிகளை குவிக்கும். பிளே ஆப் வரை செல்வதை உறுதிப்படுத்திவிட்டு, அதன்பின் நிறைய சோதனை முயற்சிகளை செய்யும்.

ஆனால் இந்த முறை தொடக்கத்திலேயே சென்னை மோசமாக சொதப்ப தொடங்கி உள்ளது. மும்பைக்கு எதிராக மட்டும் வென்ற நிலையில், டெல்லி மற்றும் ராஜஸ்தானுக்கு எதிராக சென்னை தோல்வி அடைந்துள்ளது.

தோல்வி அடைந்தது

தோல்வி அடைந்தது

சென்னை அணியின் தொடர் தோல்விக்கு முழுக்க முழுக்க சென்னை அணியின் பேட்டிங் ஆர்டர் மட்டுமே காரணமாக இருந்தது . முக்கியமாக சென்னையின் ஓப்பனிங் வீரர்கள் சரியாக ஆடவில்லை. ராயுடு காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். சிஎஸ்கேவில் டு பிளசிஸ் மட்டுமே அதிரடியாக ஆடி வருகிறார்.

எப்படி ஆட்டம்

எப்படி ஆட்டம்

சென்னை அணி தற்போது ரெய்னா இல்லாமல் மிக மோசமாக கஷ்டப்பட்டு வருகிறது. ரெய்னாவிற்கு மாற்றாக வந்த ரூத்துராஜ் சரியாக ஆடுவது இல்லை. ஒருவேளை அணியில் ரெய்னா இருந்திருந்தால் கண்டிப்பாக சிஎஸ்கே இவ்வளவு திணறி இருக்காது. ரெய்னா அணியை கண்டிப்பாக காப்பாற்றி இருப்பார்.

கோரிக்கை

கோரிக்கை

ரெய்னா இல்லாமல் சென்னையின் பேட்டிங் ஆர்டர் மிக மோசமாக சரிந்து வருகிறது. இதனால் ரெய்னாவை மீண்டும் அணிக்குள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. இதற்காக தற்போது டிவிட்டரில் சிஎஸ்கே ரசிகர்கள் ரெய்னாவிற்கு ஆதரவாக டிவிட் செய்து வருகிறார்கள். ஆனால் இதில் சிஎஸ்கே அணி நிர்வாகம் அமைதி காக்கிறது.

அமைதி காக்கிறது

அமைதி காக்கிறது

ரெய்னா குறித்து சிஎஸ்கே எதுவும் பேசவில்லை. அவர் மீண்டும் வருவாரா என்று எதுவும் கூறவில்லை. அதோடு ரெய்னா மீண்டும் வந்தால் அவரை ஏற்றுக்கொள்ளும் எண்ணத்தில் சிஎஸ்கே இல்லை என்றும் கூறுகிறார்கள். சிஎஸ்கே ஓனர் ஸ்ரீனிவாசன் மற்றும் ரெய்னா இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக இனி சிஎஸ்கேவில் ரெய்னா இணைய வாய்ப்பு இல்லை என்கிறார்கள் .

முடியாது

முடியாது

ரெய்னாவை அணியில் சேர்க்கவே கூடாது என்பதில் சிஎஸ்கே உறுதியாக உள்ளது. இதனால்தான் சிஎஸ்கே அவரை பற்றி எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை. தோனியும் ரெய்னா மீது கோபத்தில் இருக்கிறார். அவர்களுக்கு இடையே ஈகோ பிரச்சனை. ரெய்னா அணிக்குள் வருவதை தோனி விரும்பவில்லை.

அவர் இல்லாமல்

அவர் இல்லாமல்

ரெய்னா இல்லாமல் வென்று காட்ட முடியும் என்று தோனி நிரூபிக்க பார்க்கிறார். இந்த ஈகோதான் ரெய்னா குறித்து தோனி எதுவும் பேசாமல் போனதற்கும் காரணம் என்று கூறுகிறார்கள். சிஎஸ்கே மோசமாக தோல்வி அடைந்தாலும் கூட, கண்டிப்பாக ரெய்னா அணிக்குள் மீண்டும் வர மாட்டார் என்கிறார்கள்.

Story first published: Saturday, September 26, 2020, 13:03 [IST]
Other articles published on Sep 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+