Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி-ரெய்னா இடையே என்ன நடந்தது?.. கிரிக்கெட் உலகம் எழுப்பும் கேள்வி.. சின்ன தல சொன்ன சீக்ரெட் பதில்!

சென்னை: ஐபிஎல் தொடரில் இருந்து ரெய்னா விலகி உள்ள நிலையில் ரெய்னாவிற்கும், தோனிக்கும் ஏதாவது மோதலா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு ரெய்னா தற்போது ரகசியமாக பதில் அளித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக சிஎஸ்கே அணியில் நிறைய குழப்பங்கள் சர்ச்சைகள் நடந்து வருகின்றன. சிஎஸ்கே அணியில் இருந்து ரெய்னா விலகிய பின் பெரிய அளவில் அணியில் பிரச்சனைகள் நிலவி வருகிறது.

அவர் சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது ஏன் என்று உறுதியான காரணங்கள் தெரியவில்லை. இதற்கு பலரும் யுகங்களின் அடிப்படையில் காரணங்களை தெரிவித்து வந்தனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

கொள்ளையர்கள் மூலம் ரெய்னாவின் உறவினர்கள் கொல்லப்பட்டது முக்கியமான காரணமாக கூறப்பட்டது. ரெய்னாவின் நெருக்கமான உறவினர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரெய்னா அவசரமாக இந்தியா திரும்பினார்.

வேறு காரணம்

வேறு காரணம்

இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் மோதல் காரணமாக ரெய்னா தொடரில் இருந்து வெளியேறினார் என்றும் கூறினார்கள். தனக்கு சரியான ஹோட்டல் அறை கொடுக்கவில்லை, அணியில் தனக்கு மரியாதை இல்லை என்று இவர் சண்டை போட்டதாக தகவல் வந்தது. சிஎஸ்கே அணி உரிமையாளர் சீனிவாசன் ரெய்னாவை விமர்சனம் செய்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம்

இன்னொரு பக்கம்

இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் தோனிக்கும் இவருக்கும் மோதல். தோனிக்கும் ரெய்னாவிற்கு கருத்து வேறுபாடு என்று நிறைய செய்திகள் வெளியானது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று கூறுகிறார்கள். தோனிக்கும் ரெய்னாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

டிவிட்டர்

டிவிட்டர்

இதற்கு அவர்கள் ஆதாரமாக நிறைய விஷயங்களை கூறுகிறார்கள். அதன்படி ரெய்னாவின் டிவிட்டர் பக்கத்தை பார்த்தாலே தெரியும், அவர் தோனி குறித்த போட்டோக்களை எல்லாம் லைக் செய்துள்ளார். சிஎஸ்கே இன்று தோனி குறித்து பகிர்ந்த புகைப்படத்தை அவர் லைக் செய்துள்ளார். சாக்சி நேற்று வெளியிட்ட போட்டோவை லைக் செய்துள்ளார்.

தோனி ரசிகர்கள்

தோனி ரசிகர்கள்

அதேபோல் தோனி பேன்ஸ் பேஜ் வெளியிட்ட போட்டோகளையும் கூட லைக் லைக் செய்துள்ளார். இதன் மூலம் தனக்கும் தோனிக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்பதை அவர் ரகசியமாக தெரிவித்து வருகிறார். எங்கள் இடையே மோதல் இல்லை என்பதை ரெய்னா மறைமுகமாக தெரிவித்துள்ளார் என்கிறார்கள்.

கோபம் இல்லை

கோபம் இல்லை

தோனி மீது கோபம் இருந்தால் இப்படி ரெய்னா தேடி தேடி தோனியின் புகைப்படங்களை லைக் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள். அவருக்கு சிஎஸ்கே மீதுதான் கோபம். அவருக்கும் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் மட்டுமே மோதல். இதில் தோனியை இழுக்க கூடாது என்கிறார்கள்.

நீண்ட காலம்

நீண்ட காலம்

தோனியும் ரெய்னாவும் நீண்ட கால நண்பர்கள். அவர்கள் இடையே இப்படி சின்ன விஷயத்திற்கு எல்லாம் கருத்து வேறுபாடு ஏற்படாது. தோனி ஓய்வு பெறுகிறார் என்று அதே நாளில் ரெய்னாவும் ஓய்வு பெற்றார். இதுதான் அவர்களின் நட்பின் பலம். அது உடையவே உடையாது என்கிறார்கள்.

Story first published: Thursday, October 1, 2020, 15:41 [IST]
Other articles published on Oct 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+