Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"நீங்கள் செய்த வரை சந்தோசம்".. போட்டிக்கு நடுவே தோனி குறித்து ரெய்னா செய்த டிவிட்.. இதுதான் காரணம்!

துபாய்: சென்னைக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையே இன்று நடக்கும் போட்டி குறித்து கிரிக்கெட் வீரர் ரெய்னா டிவிட் செய்துள்ளார்.

சென்னைக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி தீவிரமாக நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி இதில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இன்று இறங்கிய சென்னையில் அணியில் இருந்து முரளி விஜய், ருது ராஜ், ஜோஸ் ஹசல்வுட் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக பிராவோ, அம்பதி ராயுடு, ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

மாற்றம்

மாற்றம்

இன்று சென்னை அணிக்காக களமிறங்கிய தோனி புதிய சாதனை படைத்துள்ளார். அதிக ஐபிஎல் போட்டிகளில் ஆடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மொத்தம் 194 ஐபிஎல் போட்டிகளில் ஆடும் அணியில் களமிறங்கி தோனி விளையாடி உள்ளார்.

ரெய்னா இரண்டாம் இடம்

ரெய்னா இரண்டாம் இடம்

இதற்கு முன் ரெய்னாதான் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்து இருந்தார். தற்போது ரெய்னாவின் சாதனையை தோனி முறியடித்துள்ளார். மொத்தம் 193 ஐபிஎல் போட்டிகளில் ஆடும் அணியில் களமிறங்கி ரெய்னா விளையாடி உள்ளார்.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

ரெய்னாவிற்கு அடுத்த இடத்தில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா உள்ளார். 192 ஐபிஎல் போட்டிகளில் ஆடும் அணியில் களமிறங்கி ரோஹித் சர்மா விளையாடி உள்ளார். அதேபோல் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் 185 ஐபிஎல் போட்டிகளில் ஆடும் அணியில் களமிறங்கி விளையாடி உள்ளார்.

ரெய்னா பாராட்டு

ரெய்னா பாராட்டு

இந்த நிலையில் தோனியின் சாதனையை ரெய்னா பாராட்டி உள்ளார். அதில், அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்த தோனிக்கு வாழ்த்துக்கள். என்னுடைய ரெக்கார்ட்டை நீங்கள் உடைத்தீர்கள் என்ற வரை மகிழ்ச்சி. இன்றைய போட்டியில் நீங்கள் விளையாடுவதற்கு வாழ்த்துக்கள்.. கண்டிப்பாக இந்த சீசனை சிஎஸ்கே வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது, என்று ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.

சண்டை இல்லை

சண்டை இல்லை

இந்த நிலையில் ரெய்னாவிற்கும் தோனிக்கும் சண்டை இல்லை என்பது உறுதியாகி உள்ளது. தோனி ரெய்னா இடையே மோதல் இருப்பதாக நிறைய தகவல்கள் வந்தது. ஆனால் தற்போது ரெய்னாவின் டிவிட் மூலம் இவர்கள் இடையே சண்டை இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

Story first published: Friday, October 2, 2020, 20:14 [IST]
Other articles published on Oct 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+