Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெய்னா திரும்பி வர மாட்டார்.. என்ன செய்வது என்று வீரர்களுக்கு தெரியும்.. சிஎஸ்கே சிஇஓ பரபர அறிவிப்பு

சென்னை: ஐபிஎல் தொடரின் இந்த வருட போட்டி எதிலும் சிஎஸ்கே சார்பாக ரெய்னா கலந்து கொள்ள மாட்டார் என்று சிஎஸ்கே நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

சென்னை அணியில் தற்போது பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகிறது. ஒரு பக்கம் வரிசையாக இரண்டு போட்டிகளில் சென்னை தோல்வி அடைந்து திணறி வருகிறது.

இன்னொரு பக்கம் சென்னையின் முன்னணி வீரர்களான பிராவோ, அம்பதி ராயுடு ஆகியோர் காயம் காரணமாக போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்தே ஹர்பஜன், ரெய்னா இருவரும் விலகி உள்ளனர்.

 திரும்பினார்

திரும்பினார்

ரெய்னாவின் உறவினர்கள் சிலர் கொள்ளையர்கள் மூலம் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட காரணத்தால் அவர் அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி இருக்கிறார். ரெய்னா சிஎஸ்கேவில் இருந்து வெளியேறி இருப்பதால் தற்போது சென்னை அணி ஒன் டவுன் வீரர்கள் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறது. ரெய்னா இல்லாத காரணத்தால் சென்னையின் பேட்டிங் சொதப்பி வருகிறது.

செய்திகள்

செய்திகள்

இதையடுத்து ரெய்னாவை மீண்டும் அணியில் எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இன்று இணையம் முழுக்க இதற்காக தேசிய அளவில் டிரெண்டிங் கூட செய்யப்பட்டது. இதனால் ரெய்னா மீண்டும் அணிக்கு வர வாய்ப்புள்ளது. ரெய்னா மீண்டும் வர முடிவு செய்துவிட்டார் என்று கூட செய்திகள் வெளியானது .

மறுத்தார்

மறுத்தார்

ஆனால் இந்த செய்திகளை சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விசுவநாதன் மறுத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ரெய்னாவை சிஎஸ்கேவில் இந்த முறை எதிர்பார்க்க முடியாது. அவர் இந்த தொடரில் கலந்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். சிஎஸ்கே அணிக்காக அவர் இந்த முறை விலையுண்ட மாட்டார் .

மதிப்பு

மதிப்பு

அவரின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவருக்கான தனிப்பட்ட வாழ்க்கையை நாங்கள் மதிக்கிறோம். அவரின் அணியில் சேர்ப்பது குறித்து நாங்கள் யோசிக்கவில்லை.

மீண்டு வரும்

மீண்டு வரும்

அதே சமயம் சிஎஸ்கே மீண்டு வரும். சிஎஸ்கே வேகமாக மீண்டும் வந்து, வெற்றி பாதைக்கு செல்லும். விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். ஆனால் சிஎஸ்கே அணியில் இருக்கும் வீரர்களுக்கு என்ன செய்வது என்று தெரியும். வீரர்கள் நிலைமையை சமாளிப்பார்கள். அவர்கள் விரைவில் மீண்டு வருவார்கள். ரசிகர்களை சிரிக்க வைப்பார்கள், என்று கூறியுள்ளார்.

Story first published: Saturday, September 26, 2020, 19:07 [IST]
Other articles published on Sep 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+