Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சம் புகழ் வந்ததும்.. எவ்வளவு திமிர் பாருங்கள்.. களத்தில் இளம் வீரர் செய்த காரியம்.. பரபர சம்பவம்

துபாய்: நேற்று ராஜஸ்தான் வீரர் ராகுல் திவாதியா களத்தில் நடந்து கொண்ட விதம் பலருக்கும் முகம் சுளிக்கும் வகையில் இருந்தது

நேற்று ராஜஸ்தானுக்கும் பெங்களூருக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் 177 ரன்கள் எடுத்தது.

அதன்பின் இறங்கிய பெங்களூர் அணி கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடியது. கடைசி நேரத்தில் டி வில்லியர்ஸ் அதிரடியால் பெங்களூர் அணி 3 விக்கெட் இழந்து 19.4 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது.

ராகுல் திவாதியா

ராகுல் திவாதியா

நேற்று பெங்களூருக்கு எதிரான இந்த போட்டியில் ராஜஸ்தான் வீரர் ராகுல் திவாதியா களத்தில் நடந்து கொண்ட விதம் பலருக்கும் முகம் சுளிக்கும் வகையில் இருந்தது. நேற்று ராகுல் திவாதியா தொடக்கத்தில் இருந்து சிறப்பாக பந்து வீசினார். முக்கியமாக படிக்கல் பேட்டிங் செய்யும் போது ரன் செல்ல கூடாது என்பதால் ஆப் திசையில் பந்து வீசினார்.

8வது ஓவர்

8வது ஓவர்

அதிலும் ராகுல் திவாதியா வீசிய 9வது ஓவரில் தேவ்தத் படிக்கல் பேட்டிங் செய்து வந்தார். அப்போது தேவ்தத் படிக்கல் சிக்ஸ் அடிக்க கூடாது என்பதால் தொடர்ந்து பந்துகளை ஆப் திசையில் ராகுல் திவாதியா வீசினார். ஆனால் இவர் வீசிய மூன்று பந்துகள் அடுத்தடுத்து வைட் சென்றது. 9வது ஓவரின் 5வது பந்தில் அடுத்தடுத்து மூன்று பந்துகளை ராகுல் திவாதியா வைட் போட்டார்.

ராகுல் திவாதியா

ராகுல் திவாதியா

இதனால் திவாதியா கடும் கோபம் அடைந்தார். இந்த நிலையில் ராகுல் திவாதியா வீசிய 5வது பந்தை படிக்கல் ஸ்கோயர் லெக் திசையில் அடித்தார். அப்போது ஸ்கோயர் லெக் திசைக்கு அருகிலேயே ராஜஸ்தான் வீரர் உத்தப்பா நின்று கொண்டு இருந்தார். படிக்கல் அடித்த பந்தை வேகமாக ஓடி வந்த பிடிக்க உத்தப்பா முயன்றார். ஆனால் உத்தப்பாவால் அந்த கேட்சை பிடிக்க முடியவில்லை.

முயற்சி செய்தார்

முயற்சி செய்தார்

உத்தப்பா உண்மையில் வேகமாக வந்து பந்தை பிடிக்க முயன்றார். ஆனால் அவரால் பந்தை பிடிக்க முடியவில்லை. இதை பார்த்ததும் ராகுல் திவாதியா கடுமையாக கோபம் அடைந்தார். ராபின் உத்தப்பாவை பார்த்து கோபமாக கத்தினார். ஏன் பந்தை ஓடி வந்து பிடிக்கவில்லை என்பது போல கோபமாக உத்தப்பாவிடம் கோபமாக கத்தினார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

உத்தப்பா வேகமாக ஓடி வந்தும் கூட அவரால் பந்தை பிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் ராகுல் திவாதியா கோபமாக கத்தினார். ராபின் உத்தப்பா பல நூறு போட்டிகள் ஆடிய மூத்த வீரர். அப்படிப்பட்ட ஒருவரை சில போட்டிகளில் ஆடி பிரபலம் அடைந்த ராகுல் திவாதியா திமிராக நடத்திய விதம் சர்ச்சையாகி உள்ளது. கொஞ்சம் புகழ் வந்ததும் கூடவே திமிரும் வந்துவிடுகிறது என்று பலரும் திவாதியாவை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Story first published: Monday, October 19, 2020, 7:39 [IST]
Other articles published on Oct 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+