Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெரிய குழப்பம்.. கீழே குத்திய பந்து.. சர்ச்சைக்குள்ளான சாம்சன் விக்கெட்.. உண்மையில் நடந்தது என்ன?

அபுதாபி: பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் அவுட்டானது சர்ச்சையாகி உள்ளது. இது உண்மையில் அவுட்டா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் போட்டி நடந்து வருகிறது. பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்றுள்ளது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து ராஜஸ்தான் திணறி வருகிறது. வரிசையாக அடுத்தடுத்து ராஜஸ்தானின் முக்கிய பேட்ஸ்மேன்கள் அவுட்டானார்கள்.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

3வது ஓவரின் 4 பந்திலேயே ஸ்டீவ் ஸ்மித் அவுட்டானார். உடானா போட்ட பந்தில் அவர் கிளீன் போல்டானார். அதற்கு அடுத்து ஜோஸ் பட்லரும் அவுட்டானார். நவ்தீப் சைனி போட்ட 4வது ஓவரில் நன்றாக ஆடிக்கொண்டு இருந்த ஜோஸ் பட்லர் அவுட்டானார்.

சைனி ஓவர்

சைனி ஓவர்

அந்த ஓவரில் சைனி ஒரு ரன் கூட கொடுக்கவில்லை. இதனால் ராஜஸ்தானின் டாப் ஆர்டர் மொத்தமாக சொதப்பியது. அதன்பின் இறங்கிய சஞ்சு சாம்சன் நன்றாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஐபிஎல் சீசனில் சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடி வருகிறார்.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

இதனால் இன்று நடக்கும் போட்டியிலும் சஞ்சு சாம்சன் மீது எதிர்பார்ப்பு அதிகம் ஆனது. ஆனால் சஞ்சு சாம்சன் வந்ததும் அவுட்டானார். சாஹல் போட்ட 5வது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். வெறும் 4 ரன்கள் எடுத்து அவர் அவுட்டானார். ஆனால் தற்போது இவரின் விக்கெட் நிறைய சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

சாஹல் விக்கெட்

சாஹல் விக்கெட்

சஞ்சு சாம்சன் அடித்த பந்தை சாஹல் பிடிக்கும் முன் அது பிட்ச் குத்தியதாக சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது பந்தை சாஹல் பிடிக்கும் போது, அந்த தரையில் குத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ரிப்ளேவில் பந்து கீழே குத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சஞ்சு சாம்சனுக்கு நடுவர் விக்கெட் கொடுத்தார். இது தற்போது சர்ச்சையாகி உள்ளது.

 சஞ்சு அவுட் இல்லை

சஞ்சு அவுட் இல்லை

சஞ்சு சாம்சன் அவுட் கிடையாது, பந்து தரையில்தான் முதலில் குத்தியது என்று கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அம்பயர் தவறு செய்துவிட்டார். இந்த தொடர் முழுக்க நடுவர்கள் தவறு செய்கிறார்கள். இன்று மிக சாதாரண விஷயத்தில் தவறு செய்துவிட்டார். பார்த்தாலே விக்கெட் இல்லை என்று தெரிகிறது.. ஆனால் சஞ்சு சாம்சனுக்கு அம்பயர் விக்கெட் கொடுத்துள்ளார் என்று பலரும் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

தவறான முடிவு

தவறான முடிவு

இந்த தொடரில் நடுவர்கள் பல முறை தவறாக முடிவு எடுத்தனர். பஞ்சாப் அணியின் முதல் தோல்விக்கே நடுவரின் தவறான முடிவுதான் காரணம் ஆகும். இன்றும் அதேபோல் சஞ்சு சாம்சன் விக்கெட் ஆகாத போது விக்கெட் ஆனதாக தவறாக நடுவர் தீர்ப்பு கொடுத்துள்ளார்.

Story first published: Saturday, October 3, 2020, 21:01 [IST]
Other articles published on Oct 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+