Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் டாஸில் சொதப்பிய கோலி.. பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான்.. கடும் வெயிலில் ஆர்சிபி பவுலிங்!

அபுதாபி: பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்றுள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடர் தற்போது தீவிரம் எடுத்துள்ளது. இந்த தொடரில் இதுவரை தினமும் ஒரு போட்டிகள் மட்டுமே நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கிறது.

பிற்பகலில் ஒரு போட்டியும், இரவு நேரத்திலும் ஒரு போட்டியும் நடக்க உள்ளது. இன்று ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிக்கு இடையில் ஐபிஎல் போட்டி நடக்கிறது.

பிற்பகல் போட்டி

பிற்பகல் போட்டி

இன்று நடக்கும் போட்டி அபுதாபி மைதானத்தில் நடக்கிறது. அங்கு வெப்பநிலை 38 டிகிரி செல்ஸியஸ் வரை நிலவி வருகிறது. இதனால் வீரர்கள் இன்று வெயிலுக்கு இடையே ஆடுவது மிகவும் கடினம் ஆகும். முக்கியமாக பீல்டிங் செய்வது மிகவும் கடினம் ஆகும்.

பேட்டிங்

பேட்டிங்

இந்த நிலையில் பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்றுள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. வெயில் காரணமாக முதலில் பேட்டிங் செய்வது வசதியாக இருக்கும். இதனால் தற்போது பெங்களூர் பீல்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு சென்றுள்ளது.

பெங்களூர் அணி

பெங்களூர் அணி

இன்று ஆடும் பெங்களூர் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ஆரோன் பின்ச், டி வில்லியர்ஸ், சிவம் துபே, குர்கீத் சிங் மண், வாஷிங்க்டன் சுந்தர், உடானா, நவ்தீப் சைனி , ஆடம் சாம்பா, சாஹல் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணியில் அங்கித் நீக்கப்பட்டு லோம்ரோர் சேர்க்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், ராபின் உத்தப்பா, ரியல் பராக், ராகுல் திவேதியா, டாம் கரன், ஷ்ரேயஸ் கோபால், ஜோப்ரா ஆர்ச்சர், மஹிபால் லோம்ரோர் , ஜெயதேவ் உனட்கட் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

Story first published: Saturday, October 3, 2020, 18:39 [IST]
Other articles published on Oct 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+