Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர் ஏன் ஓடி வருகிறார்.. "ஸ்டன்" ஆன வாட்சன்.. குழம்பிய டு பிளசிஸ்.. தனியாக கூப்பிட்டு பேசிய தோனி!

துபாய்: நேற்று பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வீரர்களை அதிர வைத்த சம்பவம் ஒன்று நடந்தது. பேட்டிங் செய்து கொண்டு இருந்த வாட்சன், டு பிளசிஸ் ஆகியோர் ஸ்டன் ஆகும் வகையில் சம்பவம் ஒன்று நடந்தது.

பஞ்சாப்பிற்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற்றது. டெல்லி, ராஜஸ்தான் , பெங்களூருக்கு எதிராக தோல்வி அடைந்த சிஎஸ்கே நேற்று அதிரடியாக வென்றது.

பெரிய அளவில் கஷ்டப்படாமல் சிஎஸ்கேவின் இரண்டு ஒப்பனர்கள் வாட்சன் - டு பிளசிஸ் இருவரும் பஞ்சாப் கதையை முடித்தனர். அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான்டான் என்பது போல.. பஞ்சாப்பின் அனைத்தும் பவுலர்களின் பந்துகளையும் சிஎஸ்கே வீரர்கள் காட்டு காட்டு என்று காட்டினார்கள்.

என்ன செய்தனர்

என்ன செய்தனர்

பொதுவாக வாட்சன் மற்றும் தோனி இருவருமே ஸ்பின் பவுலர்களிடம் திணற கூடியவர்கள். லெப்ட் ஹேண்ட் ஸ்பின் பவுலர்களிடம் வாட்சன் அதிகமாக திணறுவார். மேலும் லெக் ஸ்பின் பவுலர்களிடம் வாட்சன் பல முறை அவுட்டாகி உள்ளார். இதனால் நேற்று வாட்சன் பேட்டிங் செய்த போதெல்லாம் ஸ்பின் பவுலர்களை கே. எல் ராகுல் அனுப்பினார்.

முருகன் அஸ்வின்

முருகன் அஸ்வின்

நேற்று பஞ்சாப் அணிக்காக முருகன் அஸ்வின் ஆடவில்லை. இதனால் ரவி பிஸ்னோய் மீது அந்த அணி அதிகம் நம்பிக்கை வைத்து இருந்தது. ரவி பிஸ்னோய் ரைட் ஆரம் லெக் ஸ்பின் பவுலர். இதனால் நேற்று வாட்சன் பேட்டிங் செய்த போது ரவி பிஸ்னோய் சரியாக பவுலிங் செய்ய வந்தார். இவர் பவுலிங் செய்ய வந்த போதுதான் அந்த சம்பவம் நடந்தது.

என்ன செய்தார்

என்ன செய்தார்

ரவி பிஸ்னோய் பவுலிங் செய்ய, லெக் சைடில் இருந்து ஓடி வர போவதாக நடுவரிடம் கூறினார். இதனால் ரவி பிஸ்னோய்க்கு வழி விட்டு டு பிளசிஸ் ஆப் சைட்டில் நின்றார். ஆனால் கடைசி நேரத்தில் ''நான் லெக் சைடில் இருந்துதான் ஓடி வருவேன். ஆனால் ஆப் சைட் பக்கம் வந்துதான் பவுலிங் வீசுவேன்'' என்று கூறினார். அதாவது லெக் பக்கத்தில் இருந்து வந்து, பவுலிங் போடும் முன் ஆப் ஸ்டம்ப் பக்கம் சென்று பின் பவுலிங் வீசுவது இவரின் ஸ்டைல்.

எப்படி வீசுவார்

எப்படி வீசுவார்

வலது பக்கத்தில் இருந்து ஓடி வந்து, இடது பக்கம் சென்று இவர் பவுலிங் செய்வார். இதனால் பேட்ஸ்மேன்கள் இவரின் பந்தில் குழப்பம் அடைவார்கள். அதேபோல்தான் நேற்றும் ரவி பிஸ்னோய் செய்த பவுலிங் வாட்சனை பெரிய அளவில் குழப்பியது. மற்ற பவுலர்களின் பந்துகளில் வாட்சன் அதிரடியாக ஆடினாலும் ரவி பந்தில் சரியாக அவரால் ஆட முடியவில்லை. இவரின் முதல் பந்தை பிடித்துவிட்டு வாட்சன் திகைத்து போனார். டு பிளஸிஸும் குழப்பம் அடைந்தார்.

நன்றாக வீசினார்

நன்றாக வீசினார்

நேற்று பஞ்சாப் பவுலர்கள் எல்லோரும் சொதப்பிய போதும் இவர் மட்டும் கொஞ்சம் ரன் செல்வதை கட்டுப்படுத்தினார். சரியான லெந்தில் ஸ்லோ பால் போட்டு வாட்சனை திணற வைத்தார். இவரின் வித்தியாசமான ரன்னிங் ஸ்டைல், பவுலிங் ஸ்டைல் வாட்சனை குழப்பியது. இவர் இந்திய அண்டர் 19 அணிக்காக விளையாடி வருகிறார்.

பின்னணி என்ன

பின்னணி என்ன

கடந்த அண்டர் 19 உலகக் கோப்பை போட்டியில் இவர் 17 விக்கெட்டுகளை வெறும் 6 போட்டியில் எடுத்தார்.

அந்த தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரர் இவர்தான். அப்போதே இவர் பெரிய அளவில் கிரிக்கெட் உலகில் கவனம் ஈர்த்தார். அதன்பின் பஞ்சாப் அணி இவரை 2 கோடிக்கு எடுத்தது. கடந்த வருடம் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. .

தோனி பேசினார்

தோனி பேசினார்

இந்த ஐபிஎல் தொடரில் ரவி மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். நேற்று போட்டிக்கு பின் ரவியிடம் தோனி தனியாக பேசினார். அவரின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து கேட்டறிந்தார். அதேபோல் ரவி தோனியிடம் நிறைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றார்.

Story first published: Monday, October 5, 2020, 15:24 [IST]
Other articles published on Oct 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+