"அவர் வந்த அதிர்ஷ்டம்.. எதற்கும் தயாராக இருங்கள்".. 20 வயது வீரரை கொண்டாடும் கோலி.. இதுதான் சீக்ரெட்
துபாய்: 2020 ஐபிஎல் தொடரில் தொடர் வெற்றிகள் மூலம் பெங்களூர் அணி ஆச்சர்யம் அளித்துள்ளது. தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் பெங்களூர் அணி இந்த முறை கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு கை கூடி வந்துள்ளது.
2020 ஐபிஎல்லில் சிஎஸ்கே, ஹைதராபாத் போன்ற அணிகள் கடுமையாக திணறி வரும் நிலையில் இன்னொரு பக்கம் பெங்களூர், டெல்லி போன்ற அணிகள் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறது. அதிலும் பெங்களூர் இந்த முறை பெரிய அளவில் நம்பிக்கை அளித்துள்ளது.
எல்லா சீசனிலும் தொடக்கத்தில் வரிசையாக தோல்வி அடைத்துவிட்டு.. கடைசியில் பிளே ஆப் செல்ல வாய்ப்பு இருக்குமா என்று பெங்களூர் அணி கணக்கு போடும். ஆனால் இந்த முறை மிக எளிதாக பெங்களூர் பிளே ஆப் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூர்
பெங்களூர் அணியில் இதுவரை பெரிய அளவில் பவுலர்கள் இல்லை. சிராஜ், உமேஷ் யாதவ் போன்ற மோசமான பவுலர்களை வைத்துக்கொண்டு கோலி கடுமையாக திணறினார். அதேபோல் ஓப்பனிங்கில் இதுவரை இறங்கி வந்த பர்திவ் பட்டேல் பெரிய அளவில் அதிரடியாக ஆடியது கிடையாது. கோலி, டி வில்லியர்ஸை நம்பியே இதுவரை பெங்களூர் அணி இருந்தது.

ஆனால் என்ன
ஆனால் இந்த முறை பெங்களூர் அணியின் பவுலிங் மிக சிறப்பாக மாறியுள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஹைதராபாத், மும்பை அணிகளின் பவுலிங்கிற்கு இணையாக பெங்களூர் அணியின் பவுலிங் மாறியுள்ளது. ஒரு பக்கம் சாஹல் சிறப்பாக பவுலிங் செய்து..இந்த தொடரில் அதிக விக்கெட் எடுக்கும் வீரர்களில் லிஸ்டில் முன்னிலையில் இருக்கிறார் .

சுந்தர்
அதேபோல் யாருமே எதிர்பார்க்காத வகையில் வாஷிங்கடன் சுந்தர் மிக சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். பெங்களூர் அணியின் மிக முக்கியமான சொத்தாக வாஷிங்கடன் சுந்தர் உருவெடுத்துள்ளார். அதேபோல் நவ்தீப் சைனி டெத் ஓவர்களில் பும்ராவை விட சிறப்பாக பந்து வீச தொடங்கி உள்ளார். கிறிஸ் மோரிஸ் வருகையால் பெங்களூர் அணியின் பவுலிங் இன்னும் வலிமைபெற்றுள்ளது.

பேட்டிங் எப்படி
முன்பு பெங்களூர் அணியின் ஓப்பனிங் சரியாக இருக்காது. ஆனால் இந்த முறை ஆரோன் பின்ச்சால் ஓப்பனிங் வலிமை அடைந்துள்ளது. அதன்பின் கோலி, டி வில்லியர்ஸ் பேட்டிங் இறங்குகிறார்கள். இவர்கள் மூவரை விக்கெட் எடுப்பதே மிக கடினமான விஷயமாக இருப்பதால் பெங்களூர் மிக வலிமையான அணியாக உள்ளது.இன்னொரு பக்கம் வாஷிங்க்டன் சுந்தரும் நன்றாக பேட்டிங் செய்து வருகிறார்.

வேறு என்ன
ஆனால் பெங்களூர் அணிக்கு இந்த முறை கிடைத்து இருக்கும் லக்கி வீரர் என்று பார்த்தால் அது தேவ்தத் படிக்கல்தான். பெங்களூர் அணியை மொத்தமாக மாற்றியவர் படிக்கல்தான். பெங்களூரின் டாப் மூன்று பேட்ஸ்மேன்களை மட்டுமே எல்லோரும் குறி வைத்த நிலையில் .. படிக்கல் தனது அதிரடி ஆட்டம் மூலம் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.எல்லா போட்டிகளில் இவர் அதிரடியாக ஆடி வருகிறார்.. ஒரு போட்டியில் ஆடி விட்டு மற்ற போட்டியில் கட்டை போடாமல்.. பார்மை மெயின்டெயின் செய்து வருகிறார்.

செம
எல்லோரும் கோலி , பின்ச், டி வில்லியர்ஸ் மீது கவனம் செலுத்திய போது படிக்கல் கூடுதலாக வந்து பெங்களூருக்கு வலிமை கொடுத்துள்ளார். ஒரு பக்கம் பெங்களூர் பவுலிங் வலிமை அடைந்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் பெங்களூர் அணியின் பேட்டிங்கும் படிக்கல் வருகையால் வலிமை அடைந்துள்ளது. இவர்தான் அணியின் வெற்றிக்கு பின் இருக்கும் சீக்ரெட் காரணம் என்று கூறுகிறார்கள்.

வெற்றி காரணம்
இவர் வந்த பின்தான் அணியே மாறி உள்ளது என்று கோலி படிக்கல்லை வைத்து கொண்டாடி வருகிறார். விரைவில் இவர் இந்திய அணிக்கு தேர்வாக வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். அதோடு.. ஆர்சிபி ரசிகர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.. இந்த தொடரில் எதுவும் நடக்கும் என்றும் கோலி சூசகமாக கூறியுள்ளார். ஐபிஎல் கோப்பையை குறி வைத்துதான் கோலி இப்படி பேசி உள்ளார் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications