For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த தமிழக வீரர் ஒருவர் போதும்.. சிஎஸ்கே கதை முடிந்தது.. கோலியின் அசாத்திய பிளான்.. தோனிக்கு செக்!

துபாய்: நாளை சென்னைக்கு எதிராக நடக்க உள்ள போட்டியில் பெங்களூர் அணி மிக முக்கியமான பிளான் ஒன்றுடன் களமிறங்க உள்ளது .

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 6 போட்டிகளில் சிஎஸ்கே 4 போட்டிகளில் தோல்வி அடைந்துவிட்டது.

எளிதாக வெற்றிபெற வேண்டிய போட்டிகளில் கூட சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது. இதனால் நாளை நடக்கும் போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

பெங்களூர்

பெங்களூர்

நாளை சிஎஸ்கேவிற்கும், பெங்களூருக்கு இடையில் ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது. இந்த சீசனில் எப்போதும் போல இல்லாமல் பெங்களூர் வலிமையாக இறங்கி உள்ளது. ஆரோன் பின்ச், தேவ்தத் படிக்கல், வாஷிங்க்டன் சுந்தர், சாகல் ஆகியோர் பெங்களூர் அணிக்கு கேம் சேஞ்சாராக் மாறி உள்ளனர். இதனால் சிஎஸ்கேவிற்கு பெங்களூர் கண்டிப்பாக கடுமையாக அழுத்தம் கொடுக்கும்.

என்ன செய்ய போகிறார்

என்ன செய்ய போகிறார்

இந்த நிலையில் நாளை நடக்கும் போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் கோலி மிக முக்கியமான பிளான் ஒன்றை களமிறக்க போகிறார் என்று கூறுகிறார்கள். சென்னை அணிக்கு கொல்கத்தா எப்படி ஷாக் கொடுத்ததோ அதேபோல் பெங்களூர் அணியும் ஷாக் கொடுக்க போகிறது என்று கூறுகிறார்கள். நாளை பெங்களூர் அணி இரண்டுக்கும் மேற்பட்ட ஸ்பின் பவுலர்கள் உடன் களமிறங்க வாய்ப்புள்ளது.

விக்கெட்

விக்கெட்

தோனி, வாட்சன் இரண்டு பேரை கட்டுப்படுத்த கோலி ஸ்பின் பவுலர்களை பயன்படுத்துவார் என்கிறார்கள். லெக் ஸ்பின் பவுலிங்கில் வாட்சன் திணறுவார் என்பதால் இரண்டாவது ஓவரில் இருந்து சாகல் பந்து வீச வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதேபோல் தோனி பேட்டிங் வரும் போதும் சாகல் பவுலிங் செய்ய வாய்ப்புள்ளது. இதெல்லாம் போக தமிழக வீரர் ஒருவரை வைத்து சிஎஸ்கே கதையை முடிக்க பெங்களூர் திட்டமிட்டுள்ளது.

தமிழக வீரர்

தமிழக வீரர்

இந்த சீசனில் தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் மிக சிறப்பாக பந்து வீசி வருகிறார். பெரிய அளவில் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் ரன் செல்வதை கட்டுப்படுத்துகிறார். இதைத்தான் நாளையும் வாஷிங்க்டன் சுந்தர் செய்ய போகிறார். நாளை நடக்கும் போட்டியிலும் வாஷிங்க்டன் சுந்தர் சிஎஸ்கேவின் ரன் ரேட்டை கட்டுப்படுத்துவார். சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் பேட்டிங்கின் போது ரன் செல்வதை கட்டுப்படுத்தினால் போதும்..சிஎஸ்கேவை எளிதாக வீழ்த்தி விடலாம்.

மிடில் ஓவர்

மிடில் ஓவர்

சிஎஸ்கே இதுவரை நான்கு போட்டிகளில் தோல்வி அடைய மிடில் ஓவர்களில் சரியாக ரன் அடிக்காததே காரணம். மிடிலில் ஸ்பின் பவுலர் ஓவர்களில் சிஎஸ்கே கடுமையாக திணறுகிறது. இதை வைத்து நாளை சிஎஸ்கேவின் கதையை முடிக்க கோலி பிளான் போட்டு இருக்கிறார் என்று கூறுகிறார்கள். இதனால் நாளை போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்க போகிறது என்கிறார்கள்.

Story first published: Friday, October 9, 2020, 21:12 [IST]
Other articles published on Oct 9, 2020
English summary
IPL 2020: RCB skipper Kohli plans big against Dhoni and co in CSK for tomorrow match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+