Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடிச்சா இப்படி அடிக்கணும்.. நம்பர் 1 பவுலரை குறி வைத்த டிவில்லியர்ஸ்.. மிரண்டு போன ரோஹித்!

துபாய் : ஏபி டிவில்லியர்ஸ் எதிர்பாராத வகையில் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தாக்கினார்.

மும்பை கேப்டன் ரோஹித் சர்மா போட்டு வைத்த திட்டத்தை தவிடு பொடியாக்கி மிரட்டினர் டிவில்லியர்ஸ்.

கடைசி சில ஓவர்களில் 160 முதல் 180 ரன்களை மட்டுமே எட்டும் நிலையில் இருந்த பெங்களூர் அணி 200 ரன்களை தாண்டியது.

ஐபிஎல் போட்டி

ஐபிஎல் போட்டி

ஆனால், 17வது ஓவரில் டிவில்லியர்ஸ் 1 ஃபோர், 2 சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் பெங்களூர் அணி 18 ரன்கள் குவித்தது. அடுத்து 19வது ஓவரில் பும்ரா பந்துகளை மீண்டும் குறி வைத்த டி வில்லியர்ஸ் 2 போர், 1 சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரில் 17 ரன்கள் எடுத்தது பெங்களூர் அணி.

பெங்களூர் பேட்டிங்

பெங்களூர் பேட்டிங்

அந்த அணியின் துவக்க வீரர்கள் தேவ்தத் படிக்கல் 54, ஆரோன் பின்ச் 52 ரன்கள் எடுத்து இருவரும் அரைசதம் கடந்தனர். நல்ல துவக்கம் கிடைத்தாலும், அடுத்து வந்த விராட் கோலியால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை அவர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி

ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி

அடுத்து 13வது ஓவரில் களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி அடித்து ரன் ரேட்டை எகிற வைத்தார் பெங்களூர் அணியை கடைசி ஓவர்களில் கட்டுப்படுத்த உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளராக மாறி உள்ள பும்ராவை அழைத்தார்.

பும்ராவுக்கு குறி

பும்ராவுக்கு குறி

பும்ரா வீசிய 17வது மற்றும் 19வது ஓவரில் டிவில்லியர்ஸ் அதுவரை இல்லாத அளவு ரன் குவித்தார். பும்ராவை குறி வைத்து தாக்கினார் அவர். பும்ரா தான் வீசிய முதல் 2 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார்.

பவுண்டரி கணக்கு

பவுண்டரி கணக்கு

ஆனால், 17வது ஓவரில் டிவில்லியர்ஸ் 1 ஃபோர், 2 சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் பெங்களூர் அணி 18 ரன்கள் குவித்தது. அடுத்து 19வது ஓவரில் பும்ரா பந்துகளை மீண்டும் குறி வைத்த டி வில்லியர்ஸ் 2 போர், 1 சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரில் 17 ரன்கள் எடுத்தது பெங்களூர் அணி.

ரோஹித் சர்மா திட்டம் காலி

ரோஹித் சர்மா திட்டம் காலி

டிவில்லியர்ஸ் 24 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். 4 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து இருந்தார். இதில் பும்ரா ஓவர்களில் மட்டுமே 3 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து ரோஹித் சர்மாவை மிரள வைத்தார். அவரது திட்டத்தை உடைத்து பெங்களூர் அணி 200 ரன்கள் எடுக்க காரணமாக இருந்தார்.

சிவம் துபே

சிவம் துபே

கடைசி ஓவரில் சிவம் துபே 3 சிக்ஸ் அடிக்க 20 ரன்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா பெங்களூர் அணியை 180 ரன்களுக்குள் சுருட்டலாம் என கணக்கு போட்டு வைத்திருந்தார்.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

அதை தவிடு பொடியாக்கினார் டிவில்லியர்ஸ். சிவம் துபேவும் கடைசி ஓவரில் ஒத்துழைத்தார். அவர் 10 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார். அடுத்து ஆடிய மும்பை அணி ரன் குவிக்க திணறி விக்கெட்களை இழந்தது. இஷான் கிஷன் சிறப்பாக ஆடினார்.

Story first published: Monday, September 28, 2020, 23:20 [IST]
Other articles published on Sep 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+