Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB vs MI : சூப்பர் ஓவரின் கடைசி பந்து.. ஹார்ட் பீட்டை எகிற வைத்த டி20.. பெங்களூர் வெற்றி!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சூப்பர் ஓவர் வரை சென்று மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 201 ரன்கள் குவித்தது.

படிக்கல் 54, ஆரோன் பின்ச் 52 ரன்கள் குவித்தனர். ஏபி டிவில்லியர்ஸ் கடைசி ஓவர்களில் தன் அதிரடி ஆட்டம் மூலம் பெங்களூர் அணியை 200 ரன்களை கடக்க வைத்தார். அடுத்து ஆடிய மும்பை அணி இஷான் கிஷன், பொல்லார்டு ஆட்டத்தால் போட்டியை டை செய்தது. சூப்பர் ஓவரில் பெங்களூர் வெற்றி பெற்றது.

பெங்களூர் - மும்பை போட்டி

பெங்களூர் - மும்பை போட்டி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் இடையே ஆன 10வது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூர் அணி கடந்த போட்டியில் தோல்வி அடைந்ததால் அணியில் மாற்றங்கள் செய்தது.

பெங்களூர் துவக்கம்

பெங்களூர் துவக்கம்

பெங்களூர் அணிக்கு தேவ்தத் படிக்கல் - ஆரோன் பின்ச் அதிரடி துவக்கம் அளித்தனர். பின்ச் ஒருபுறம் பவுண்டரி அடித்துத் தள்ள, படிக்கல் அவருக்கு ஒத்துழைத்து ஆடினார். பின்ச் 35 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அரைசதம்

அரைசதம்

அடுத்து கோலி நிதான ஆட்டம் ஆட படிக்கல் அதிரடி ஆட்டம் ஆடி ரன் குவித்தார். அவர் 40 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். இது இந்த சீசனில் அவரது இரண்டாவது அரைசதம் ஆகும். துவக்கம் அபாரமாக இருந்த போதும் கோலி மட்டுமே ஏமாற்றினார்.

ஏமாற்றிய கோலி

ஏமாற்றிய கோலி

மூன்றாம் வரிசையில் இறங்கிய கோலி பும்ரா, ராகுல் சாஹர், க்ருனால் பாண்டியா என இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சந்திக்கவே திணறினார். 11 பந்துகளில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமாக ஆட்டமிழந்தார்.

டிவில்லியர்ஸ்

டிவில்லியர்ஸ்

கோலியால் சறுக்கிய ரன் ரேட்டை உயர்த்த ஏபி டிவில்லியர்ஸ் போராடினார். அவருடன் சிவம் துபே இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினார். இருவரும் கடைசி ஓவர்களில் மும்பை பந்துவீச்சை சிதற வைத்தனர். டிவில்லியர்ஸ் 24 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

சிவம் துபே 10 பந்துகளில் 27 ரன்கள் குவித்து மிரட்டினார். அவர் 1 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து இருந்தார். பெங்களூர் அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்து 3 விக்கெட்கள் மட்டுமே இழந்து இருந்தது. மும்பை அணி 202 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது.

மும்பை சறுக்கல்

மும்பை சறுக்கல்

மும்பை அணியில் ரோஹித் சர்மா 8, டி காக் 14, சூர்யகுமார் யாதவ் 0 ஏன் வரிசையாக ஆட்டமிழந்தனர். மும்பை அணி 6.4 ஓவரில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. அடுத்து வந்த ஹர்திக் பாண்டியாவும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இஷான் கிஷன் போராட்டம்

இஷான் கிஷன் போராட்டம்

பெரிய எதிர்பார்ப்பின்றி ஆட வந்த இஷான் கிஷன் மும்பை அணியை கரை சேர்க்க போராடினார். அவருடன் கடைசி சில ஓவர்களில் ஆட பொல்லார்டு இணைந்தார். முதல் சில பந்துகளில் தடுமாறினார் பொல்லார்டு. அப்போது இஷான் கிஷன் தனி ஆளாக ரன் குவித்து வந்தார்.

பொல்லார்டு வெறியாட்டம்

பொல்லார்டு வெறியாட்டம்

கீரான் பொல்லார்டு பின்னர் வேகம் எடுத்தார். 4 ஓவர்களில் 80 ரன்கள் தேவை என்ற நிலையில் 17வது ஓவரில் அவரது அதிரடியால் மும்பை 27 ரன்கள் குவித்தது. அடுத்து 18வது ஓவரில் 22, 19வது ஓவரில் 12 ரன்கள் குவித்தது மும்பை.

சூப்பர் ஓவர்

சூப்பர் ஓவர்

கடைசி ஓவரில் இஷான் கிஷன் இரண்டு சிக்ஸ் அடித்து 5 ரன்கள் தேவை என்ற நிலையில் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் பொல்லார்டு ஃபோர் அடித்தார். போட்டி டை ஆனது. அடுத்து நடந்த சூப்பர் ஓவரில் பெங்களுர் அணியின் சைனி பந்து வீசினார். மும்பை அணி ரன் குவிக்கத் திணறி, பொல்லார்டு விக்கெட்டை இழந்து 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூர் அணி இதை சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் எட்டி வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, September 29, 2020, 0:08 [IST]
Other articles published on Sep 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+