For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாதியில் வெளியேறிய வீரர்.. காணாமல் போன "முக்கிய ரிப்போர்ட்".. ஐபிஎல்லில் விஸ்வரூபமெடுக்கும் விவகாரம்

துபாய்: ஐபிஎல் 2020 தொடரில் இருந்து வெளியேறிய ஹைதராபாத் வீரர் ஒருவரின் ஹெல்த் ரிப்போர்ட் காணாமல் போனதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது.

ஐபிஎல் தொடர் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வந்தாலும் இன்னொரு பக்கம் முக்கியமான வீரர்கள் வரிசையாக காயம் அடைந்து வருகிறார்கள். அஸ்வின், இஷாந்த் சர்மா என்று அடுத்தடுத்து பல வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையில் கடந்த வாரம் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஸ் காயம் அடைந்தார். ஆர்பிசி அணி பேட்டிங் செய்த போது பவுலிங் செய்த ஹைதராபாத் வீரர் மிட்சல் மார்ஸ் காயம் அடைந்தார்.

காயம் எப்படி

காயம் எப்படி

அவர் ஐந்தாவது ஓவர் வீசிக்கொண்டு இருந்தார். அப்போது நான்காவது பந்து வீசியவர் கீழே விழுந்து காயம் அடைந்தார். இதனால் அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை விஜய் சங்கர் வீசினார். 28 வயதாகும் மிட்சல் மார்ஷ் காயம் காரணமாக மைதானத்தில் கடுமையாக அவதிப்பட்டார்.

என்ன ஆனது

என்ன ஆனது

அதன்பின் நடக்கவே முடியாமல் கஷ்டப்பட்டு நடந்து மைதானத்தை விட்டு வெளியே சென்றார். அவர் கடுமையான வலியில் துடித்தார். இவரின் காயம் மிக மோசமாக இருந்தது. இந்த நிலையில் காயம் காரணமாக தற்போது ஐபிஎல் தொடரில் இருந்தே இவர் விலகி உள்ளார். இது ஹைதராபாத் அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

நீக்கம்

நீக்கம்

இந்த நிலையில் காயம் காரணமாக இவர் ஆஸ்திரேலியா திரும்பி உள்ளார். ஆஸ்திரேலியாவில் இவர் தனது காயம் குறித்து சோதனை செய்ய ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் மருத்துவர்களிடம் சென்றுள்ளார். அங்கு இருக்கும் பிஸியோவிடம் தனது காலை காட்ட சென்றுள்ளார். ஆனால் அங்கு அணி நிர்வாக மருத்துவர்கள், மிட்சல் மார்ஷின் ஹெல்த் ரிப்போர்ட் தங்களிடம் இல்லை என்று கூறியுள்ளனர்.

ஹெல்த் ரிப்போர்ட்

ஹெல்த் ரிப்போர்ட்

துபாயில் இருந்து உங்களின் ஹெல்த் ரிப்போர்ட் வரவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் அவரின் காலில் என்ன மாதிரியான காயம் ஏற்பட்டது. எப்படி ஏற்பட்டது என்பது குறித்த அடிப்படை விவரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு தெரியாமல் உள்ளது. அதே சமயம் ஹைதராபாத் அணி நிர்வாகத்திடமும் மிட்சல் மார்ஷின் ஹெல்த் ரிப்போர்ட் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

அனுப்பிவிட்டோம்

அனுப்பிவிட்டோம்

மிட்சல் மார்ஷின் ஹெல்த் ரிப்போர்ட்டை அனுப்பிவிட்டோம் என்று ஹைதராபாத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ரிப்போர்ட் ஆஸ்திரேலிய நிர்வாகத்திடமும் இல்லை, மிட்சல் மார்ஷிடமும் இல்லை. இதனால் இவருக்கு காலில் செய்யபட்ட சோதனை குறித்த ரிப்போர்ட் எங்கே சென்றது என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக வீரர்கள் காயம் அடையும் போது.. உடனே செய்யப்படும் சோதனை மிக முக்கியமானது ஆகும்.

காயம் எப்படி

காயம் எப்படி

காயம் எப்படி ஏற்பட்டது.. எந்த அளவிற்கு பாதிப்பு இருக்கிறது என்று இந்த சோதனையின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். வீரர்களின் வருங்கால பயிற்சிக்கு இந்த முதற்கட்ட சோதனை அவசியம். தற்போது இந்த ரிப்போர்ட்தான் காணாமல் போய் உள்ளது. இந்த ரிப்போர்ட் எங்கே போனது , எப்படி மாயமானது என்று தெரியாத காரணத்தால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Story first published: Wednesday, September 30, 2020, 13:20 [IST]
Other articles published on Sep 30, 2020
English summary
IPL 2020: Report of SRH player Mitchel Marsh gone missing .'
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+